டைட்டானிக் காதலும் கவுந்து போகும் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது

டைட்டானிக் காதலும் கவுந்து போகும் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக இன்று வெளியிடபட்டுள்ளது..

டைட்டானிக் காதலும் கவுந்து போகும் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது
kalaiyarasan & anandhi

இயக்குனர் எம்.ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன், கயல் ஆனந்தி, காளி வெங்கட், ஜாங்கிரி மதுமிதா, ராகவ் விஜய் மற்றும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படிதான் உள்ளிட்ட படங்களில் நடித்த ஆஷ்ணா ஜவேரி உள்ளிட்ட பலர் நடிக்கும் டைட்டானிக் காதலும் கவுந்து போகும் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்..

தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். மேலும் படத்தில் எடிட்டராக ராதாகிருஷ்ணன் தனபால், ஒளிபத்திவாளராக பல்லு ஆகியோர் பணியாற்றியுள்ளனர்..

டைட்டானிக் காதலும் கவுந்து போகும் படத்தின் முதல் பாடல் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா பாடிய “காலமும் கெட்டு போச்சு” பாடல் கடந்த 2018 ஆம் ஆண்டு இணையத்தில் வெளியானது..

அதை தொடர்ந்து, யாழினி என்ற பாடலும் நடிகர் சிலம்பரசன் பாடிய கொக்கா மக்கா என்ற பாடல் என படத்தின் அனைத்து பாடல்களும் ஏற்கனவே இணையத்தில் வெளியானது..

இதனையடுத்து Titanic kadhalum kavundhu pogum படத்தின் டிரைலர் கடந்த வருடம் ஜனவரி மாத இறுதியில் யுட்யூப் தளத்தில் வெளியானது. இப்படத்தின் டிரைலரை இதுவரையில் யுட்யூப் தளத்தில் 1.4 மில்லியன் பாரவையாளர்களை கடந்து வருகிறது..

இத்திரைபடம் கடந்த வருடம் 2020 ஜூன் மாதம் திரைக்கு வர இருந்த நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனது..

தற்போது இத்திரைபடம் திரைக்கு வர தயாராகி கொண்டிருக்கும் நிலையில் படத்தின் ப்ரமோஷன் வேலைகளும் ஒரு புறம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டைட்டானிக் காதலும் கவுந்து போகும் திரைப்படம் வரும் ஜூன் 24 ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பினை தொடர்ந்து titanicjune23 என்ற ஹஸ்டாக் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது.

Exit mobile version