Last Updated on June 2, 2021 by Dinesh
வித்யாபிரதீப் நடிக்கும் படத்தின் போஸ்டர் இன்று வெளியானது. படத்தின் போஸ்டர்ரை இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்.

தனியார் தொலைகாட்சியில் ஒலிபரப்பாகிவரும் நாயகி என்ற சீரியலில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகை வித்யாபிரதீப்..
இவர் தமிழில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பில் வெளிவந்த தடம், தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘மாரி 2’ மற்றும் அதர்வா நடிப்பில் வெளிவந்த ‘ஒத்தைக்கு ஒத்தை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்..
நாயகி சீரியல்
கொரோனா தொற்றின் காரணமாக வெள்ளிதிரை மற்றும் சின்னதிரை படபிடிப்புகள் நிறுத்தி வைக்கபட்டு இருந்தது.
பின்னர் தமிழக அரசு கட்டுபாடுகளுடன் கூடிய தளர்வுகளை அறிவித்து சின்னதிரை படபிடிப்புக்கு அனுமதியை வழங்கியது.
இதை தொடர்ந்து தமிழகத்தில் படபிடிப்புகளுக்கு அனுமதி வழங்கபட்டாலும். ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருப்பதால் மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவதற்கான கட்டுபாடுகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன.
எனவே சின்ன திரை படபிடிப்பிற்கு வர முடியாமல் நடிகர், நடிகைகள் வருவது மிகவும் சிரமம் ஏற்ப்பட்டது.
இதனால் பிரபல சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் சிலர் மாற்றபட்டனர் இதனால் நாயகி தொடரில் நடித்து வந்த வித்யா பிரதீப் தொடரில் இருந்து விலகிவிட்டார்.
என பல்வேறு வதந்ததிகள் இணையத்தில் வெளிவந்தது. இந்த வதந்திக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக நடிகை வித்யா பிரதீப் தனது சமூக வலைத்தளதில் தன்னுடைய ரசிகர்களுக்கு அதற்கான பதில் அளித்தார் அதில் அவர் கூறியிருப்பதாவது.
கொரோனா தொற்று காரணமாக நான் நாயகி தொடரை விட்டு வெளியேறவில்லை. எங்கள் பகுதி அதிகாரபூர்வமாக முடிந்து விட்டது. எனவே கடந்த மாதமே இதை பற்றி அதிகாரபூர்வமாக தொடரில் அறிவிக்கப்பட்ட பின்னர் இதை வெளியிட்டேன்.
நான் ஏன் விலகினேன் என்று என்னிடம் திடீரென்று செய்தி எழுந்ததை கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன் நான் ஒரு போதும் திட்டத்தை விட்டு வெளியேற மாட்டேன் நன்றி என அவர் தெரிவித்தார்.
க/பெ.ரணசிங்கம் படத்திற்கு யு சான்றிதழல்…
வித்யாபிரதீப் நடிக்கும் படத்தின் போஸ்டர்
நடிகை வித்யா பிரதீப் நாயகி தொடரின் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இந்த பதிவை பார்த்த அவரது ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை மகிழிச்சியாக தெரிவித்து வந்தனர்.
பவுடர் போஸ்டர்
தற்போது நடிகை வித்யா பிரதீப் .நடித்து இருக்கும் ‘பவுடர்’ திரைபடத்தின் பஸ்ட் லுக் போஸ்டர்ரை
இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இப்படதில் நடிகை வித்யா பிரதீப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் படத்தில் மனோ பாலா, வையாபுரி, அகல்யா வெங்கடேசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் போஸ்டர்ரை காணும் போது பவுடர் திரைப்படம் திகில் படமாக இருக்கும் என பலராலும் எதிர்பார்க்கபடுகிறது பவுடர் திரைபடத்தை இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்குகிறார்.
இவர் ஏற்கனவே சாரு ஹாசன் நடிப்பில் வெளிவந்த தா தா 87 படத்தை இயக்கியவர் ஆவார்
பவுடர் திரைபடத்தை ஜெயஸ்ரீ விஜய் தயாரிக்கிறார் இத்திரைபடம் 2021 பொங்கலுக்கு திரைக்கு வரும் என படகுலு தெரிவித்துள்ளது.