MoviesUpcoming

தனுஷ் நடிக்கும் ‘கர்ணன்’ டைட்டில் லுக் வெளியானது

தனுஷ் நடிக்கும் ‘கர்ணன்’ டைட்டில் லுக் படக்குழு இன்று அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

கர்ணன் டைட்டில் லுக் வெளியான சிறிது நேரத்திலே ரசிகர்களால் இணையத்தில் பெரும் அளவு வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் பிறந்த நாளான இன்று (ஜூலை 28) அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் (HappyBirthdayDhanush) என்ற ஹேஸ்டாக்-கை

உருவாக்கி தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் மேலும் திரைத் துறை பிரபலங்கள் பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

தனுஷ் நடித்து கொண்டு இருக்கும் ‘கர்ணன்மற்றும் ‘ஜகமே தந்திரம்’ உள்ளிட்ட இரண்டு படங்களின் புதிய அப்டேட்-கலை அவரது பிறந்த நாளை முன்னிட்டு வழங்கியுள்ளனர் இரு இயக்குனர்கள்.

ரசிகர்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் புதிய அப்டேட்-கலை வந்தமையால் தனுஷின் ரசிகர்கள் இன்று சமூக வலை தளங்களில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

தனுஷ் நடிக்கும் ‘கர்ணன்’ டைட்டில் லுக் வெளியானது

இதனை தொடர்ந்து இயக்குனர் ‘மாரி செல்வராஜ்’ இயக்கும் இப்படம் முழுக்க முழுக்க திருநெல்வேலி-யை சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதாலும் பட பிடிப்புக்கு தடை இருப்பதால் ஊரடங்க காலம்.

முடிந்த பிறகே படத்தின் இறுதி கட்ட பட பிடிப்புகளை எடுக்க படக்குழு முடிவு செய்து இருகின்றனர். படத்தின் இறுதி கட்ட படபிடிப்புகளும் திருநெல்வேலி சுற்றிய பகுதிகளிலே எடுப்பதாக முடிவு செய்திருகின்றனர்.

கலைபுலி தாணு தயாரித்து வரும் இப்படத்தில் தனுஷ், யோகி பாபு , லால் ,ராஜிஷா விஜயன், கௌரி கிஷன் , லட்சுமி பிரியா உள்ளிட்டோர் நடித்து இருகின்றனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

தயாரிப்பாளர் தாணு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி என குறிப்பிட்டு கர்ணன் படத்திற்கு செட் அமைக்கும் வீடியோ ஒன்றை தனுஷ் பிறந்த நாளுக்கு ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.

தனுஷ் நடிக்கும் ‘கர்ணன்’ டைட்டில் வீடியோவில் அற்புதமான கிராமத்து இசையில் தொடங்கும் வீடியோவில் கிராமத்தில் இருக்கும் வீடுகளை போன்ற செட் அமைக்கிறார்கள். வீடியோ-வின் இறுதியில் தனுஷ் ஒரு அரிவாளுடன் ஓடி சென்று மலைமீது நின்று பார்ப்பது போன்ற காட்சி எடுக்கபட்டுள்ளது.

அருமையான இசையுடன் கூடிய அந்த வீடியோ வெளியான சிறிது நேரத்தில் 2-லட்சம் பார்வையாளர்களை கடந்தது.

மேலும் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது “நீதி சூரியனை போல் முளைத் தெழக்கூடியது – கர்ணன் என குறிப்பிட்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தனுஷ் என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் மாரி செல்வராஜ் இதற்கு முன் ‘பரியேரும் பெருமாள்’ என்கிற திரைப்படத்தை இயக்கியவர் முதல் படமே அவருக்கு மிக பெரிய வெற்றி படமாக அமைந்து இருந்தது.

அதற்கு பின் தனுஷ்-யை வைத்து .தனது இரண்டாவது படமாக கர்ணன் படத்தை இயக்குகிறார் இது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பெற்று வருகிறது.

.இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்த வடசென்னை, அசுரன் போன்ற மிக பெரிய வெற்றி படங்களுக்கு பிறகு தனுஷ் மாரி செல்வராஜ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !