சிம்பு நடிப்பில் உருவான ஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு…

சிம்பு நடிப்பில் உருவான ‘ஈஸ்வரன்’ படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது..

சிம்பு நடிப்பில் உருவான ஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு
STR

சிம்பு நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ திரைபடத்தில் நடித்தார்.. அதற்கு பின் வெகு நாட்களுக்கு கழித்து தற்போது சிம்பு நடிப்பில் உருவான ஈஸ்வரன் திரைப்படம் திரைக்கு வருகிறது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ திரைபடத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக கடந்த தினங்களில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

இதை அறிந்த சிம்பு ரசிகர்கள் மாநாடு திரைபடத்தின் அப்டேட்களை கேட்டு அவ்வ போது சமூக வலைத்தளங்களில் மாநாடு என்ற ஹஸ்டாக் உருவாக்கி வந்தனர்..

ஆனால், தற்போது சிம்பு இயக்குனர் சுசிந்தரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ திரைபடத்தில் நடித்து அதன் டீசர் இன்று வெளியீட்டு அவருடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருந்த நடிகர் சிம்பு கடந்த சில தினங்களுக்கு முன் தான் மீண்டும் சமூக வலைத்தளங்களில் வருவதாக அறிவித்து இருந்தார்.

மேலும், அவர் பழைய படி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட போவதாகவும், தன்னுடைய ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் அவ்வ போது கலந்துரையாட போவதாகவும் முன்னேரே தெரிவித்து இருந்தார். அதன் படி அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் ‘ஈஸ்வரன்’ பட மோசன் போஸ்டர் வெளியிட்டார்.

பிரேம்ஜி படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

கிராமபுற பின்னணி கதை அம்சம் கொண்ட படத்தின் கதையை சிம்புவிடம் இயக்குனர் சுசீந்திரன் கூற அவரும் சம்மதம் தெரிவித்து படத்தின் படப்பிடிப்பை ஆர்மாபித்தனர் படக்குழு.

ஈஸ்வரன் படபிடிப்பிற்கு கலந்து கொள்வதற்காக மதுரை விமான நிலையதிற்கு மாஸ்க் அணிந்து வந்த சிம்பு அடையாளம் தெரியாத அளவுக்கு தனது உடல் எடையை ஈஸ்வரன் படத்திற்காக குறைத்து உள்ளார் நடிகர் சிலம்பரசன் அந்த புகைபடங்களும் ரசிகர்களால் இணையத்தில் பகிரபட்டு வைரலானது.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால், பாரதிராஜா, நந்திதா உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர் படத்திற்கு தமன் இசையமைக்கிறார் படத்தை பாலாஜி காபா தயாரிக்கிறார்..

இப்படத்தை ஒரே மாதத்தில் எடுத்து முடித்து ரிலீஸ்சுக்கு தயாராகி உள்ளது வரும் 2021 பொங்களுக்கு திரைக்கு வரும் என படக்குழு அறிவித்து உள்ளது..

வரும் 2021 பொங்களுக்கு விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர், கார்த்தி நடிக்கும் சுல்தான், தனுஷ் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்களின் பட்டியலில்

தற்போது சிம்புவின் ‘ஈஸ்வரன்’ திரைபடமும் இணைந்து இருக்கிறது. ஆதலால் வரும் 2021 பொங்கல் சரவெடி பொங்களாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

ஈஸ்வரன் திரைபடத்திற்கு பிறகு நடிகர் சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடிக்க உள்ளார் அதற்கான படபிடிப்பிற்கு கலந்து கொள்ள போவதாகவும் சிம்பு தனது புகை.படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்தார்.

ஏற்கனவே இப்படத்தின் படபிடிப்புகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்தது படக்குழு தற்போது மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளது படக்குழு.

watch it .STR Eeswaran official teaser
Exit mobile version