Tamil CinemaUpdates

விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் டீசர் வெளியானது…

விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் மாஸ்டர் படத்தின்அசத்தலான டீசர் வெளியானது
vijay & vijaysethupathi

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் அப்டேட் எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து அளிக்கும் விதமாக மாஸ்டர் படத்தின் படக்குழு இன்று டீசரை வெளியிட்டது..

மாஸ்டர் படத்தின் டீசர் வெளியான சிறிது நேரத்திலே 4 லட்சத்துக்கும் அதிகமான பரவையாளர்களை கடந்தது.

அது மட்டுமின்றி சமூக வளதளங்களில் #masterTeaser #vaathicoming, thalapathyvijay போன்ற ஹஸ்டாக் ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யபட்டு வருகிறது.

இந்த வருடம் ஏப்ரல் மாதமே திரைக்கு வர இருந்த மாஸ்டர் திரைப்படம் கொரோனா அச்சுறுதலால் ஊரடங்கு அமல்படுத்தபட்டு திரை அரங்குகள் மூட பட்டதனால் படம் திரைக்கு வர முடியாமல் போனது.

பின்னர் ஓடிடி தளங்களில் மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ளதாக அவ்வ போது வதந்திகள் வெளி வந்த வண்ணம் இருந்தன. இதனால் விஜய்யின் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். மேலும் தளபதி விஜய் படத்தை திரை அரங்குகளில் விசில் அடித்து பார்த்து ரசிக்கவே நாங்கள் விரும்புகிறோம்.

எனவே மாஸ்டர் திரைபடத்தை ஓடிடி தளத்தில் வெளியிடம் எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கள் முதலில் திரை அரங்கில் படதை ரிலீஸ் செய்து விட்டு பின்னர் வேண்டுமானால் பின்னர் ஓடிடி தளங்ககளில் படத்தை ரிலீஸ் செய்து கொள்ளுங்கள்.

என ரசிகர்கள் தங்கள் கருத்துகளையும், கோரிக்கைகளையும் சமூக வலைத்தளங்களில்முன் வைத்து வந்தனர். அந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்று புள்ளி வைக்கும் விதமாக

படத்தின் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோ தனியார் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் மாஸ்டர் திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கபட்டுள்ளது.

சிம்பு நடிப்பில் உருவான ஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு…

விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் டீசர் வெளியானது…

ஆதலால் மாஸ்டர் திரை அரங்கில் தான் வெளியிட உள்ளதாக அறிவித்தார். மேலும் அவர் கூறியதாவது.

தளபதி விஜய் மாஸ்டர் திரை படத்தை ரசிகர்களுக்காக திரை அரங்குகளில் தான் வெளியிட வேண்டும் எனவும் என விஜய் என்னிடம் தெரிவித்ததாக சொன்னார்.

விஜய் படத்தை இந்த வருடம் திரையில் காண முடியாதோ என்ற சந்தேகத்தில் இருந்த ரசிகர்களுக்கு மேலும் இது உற்சாகத்தை அளித்தது.

இதை தொடர்ந்து மாஸ்டர் படத்தில் இருந்து vaathicoming(வாத்திகம்மிங்க்), kuttistory ( குட்டிஸ்டோரி), போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் அப்பாடல்கள் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.

இசையமைப்பாளர் அணிருத் இசையில் ஸ்டைல்லான விஜய்யை காண்பித்து இருக்கிறார் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.. டீசரில் கெத்தான வாத்தியாக வலம் வருகிறார் தளபதி விஜய்

குறிப்பாக விஜய் சேதுபதி பேசும் ஒரு வாத்திக்கு எப்படி இவ்ளோ தைரியம் வந்துச்சி, அந்த வாத்தி ஒரு மாதிரி மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கான் போன்ற வசனங்கள் படத்தின் எதிர்பார்ப்பை அதிக படுத்துவதாகவே உள்ளது..

விஜய் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு சரவெடி ட்ரீட் ஆக கொடுத்து இருக்கிறாரா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும் இப்படம் வரும் 2021 பொங்களுக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, சாந்தனு பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.

படத்திற்கு அணிருத் இசையமைதிருக்கிறார் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.

watch it master official teaser

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !