Beast : இந்த பேர் புகழ் முடியாதே இன்னும் ஏருமே

Beast : இந்த பேர் புகழ் முடியாதே இன்னும் ஏருமே என்ற அதிரடி வசனங்களுடன் வெளியானது பீஸ்ட் படத்தின் மூன்றாவது பாடல்…

Beast : இந்த பேர் புகழ் முடியாதே இன்னும் ஏருமே
Thalapathy Vijay

தளபதி விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்க்ஸ்லே, வி‌டி‌வி கணேஷ், பிஜோர்ன் சுர்ராவ், ஷைன் டாம் சாக்கோ லிலிபுட் ஃபருக்கி, அன்கூர் அஜீத் விகல் உள்ளிட்ட ஏஏரலாமானோர் பீஸ்ட்டில் நடித்துள்ளனர்..

சன் பிக்சர்ஸ்‌ தயாரிக்கும் இப்படத்தினை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். படத்திற்க்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் இசையமைக்கிறார்.

மேலும் படத்தில் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரம்ஹம்சா எடிட்டர் ஆர். நிர்மல் ஆகியோர் இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

155 நிமிடங்கள் கொண்ட பீஸ்ட் திரைப்படம் தமிழ் (14.04.2022 ) புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13 ஆம் தேதி ஏற்கனவே அறிவித்தபடி திரைக்கு வர இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை இப்படத்தின் விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது.

இதை போன்று தெலுங்கில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், சுரேஷ் ப்ரொடக்ஷன்ஸ்‌ மற்றும் ஏசியன் சினிமாஸ்‌ ஆகியோர் தெலுங்கு உரிமத்தை பெற்றுள்ளனர்.

மலையாளத்தில் மேஜிக் ப்ரேம்‌ஸ்‌, கன்னட மொழியில் தீரஜ் என்டர்பரைஸ், ஹிந்தியில் யுஎஃப்ஓ மூவிஸ்‌ என 5 மொழிகளிலும் விநியோக உரிமத்தை பெற்றுள்ளனர்.

இதை தவிர படத்தின் வெளிநாட்டு உரிமத்தை பிரபல நிறுவனமான அயங்கரன் இன்டர்நேஷனல் பெற்றுள்ளது..

தற்போது பீஸ்ட் படத்தின் மூன்றாவது பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மேலும் உற்சாகபடுத்தியுள்ளனர் படக்குழுவினர். ஏற்கனவே பீஸ்ட் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்திருக்கும் வேலையில் நேற்றைய தினம் சன் பிக்சர்ஸ்‌ படத்தின் மூன்றாவது இன்று வெளியிடபடும் என்று அறிவித்து இருந்தது..Beast : மூன்றாவது பாடல் குறித்த அப்டேட் இதோ

ஏற்கனவே அறிவித்த படி, இன்று மாலை 6.00 மணிக்கு பீஸ்ட் படத்திலிருந்து beast mode என்ற மூன்றாவது பாடல் லிரிகள் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பாடலில் தளபதி விஜய்யின் சில அதிரடியான சண்டை காட்சிகளும், துப்பாக்கியை ஏந்தியபடியான புகைபடங்கள் அடங்கிய லிரிகள் வீடியோ வெளியானது..

இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார், இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் பாடலை பாடியிருக்கிறார்.

Beast Mode பாடல் வெளியான சிறிது நேரத்தில் சமூக வலைத்தளம் மற்றும் யுட்யூப் தளத்திலும் ட்ரெண்ட்ங்கில் இடம் பிடித்தது..

கீழே Beast Mode பாடல் கொடுக்கப்ட்டுள்ளது பார்த்து மகிழுங்கள்..

Exit mobile version