Tamil CinemaUpdates
Trending

பரபரப்பான துணிவு ட்ரைலர் மாஸ் காட்டும் அஜீத்

இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜீத் குமார் நடிக்கும் துணிவு படத்தின் ட்ரைலர் வெளியாகி ட்ரெண்ட் ஆகிறது…

thunivu release date
AK

நேர் கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு நடிகர் அஜீத் குமார், எச். வினோத், போனி கபூர் ஆகியோர் மூன்றாவது முறையாக இணையும் படம் துணிவு..

அஜீத் 61 வது படமான துணிவு படத்தில் அஜீத் குமார், மஞ்சு வாரியர், மகாநதி ஷங்கர், சமுத்திரகணி, பிரேம் குமார், ஜான் கொக்கின் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்க்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்..

இன்று துணிவு படத்தின் ட்ரைலர் மாலை 7.00 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கபட்டிருந்தது.

துணிவு படத்தின் ட்ரைலரை முன்னிட்டு நேற்று படத்தின் கதாபாத்திரங்கள் அதிகாரபூர்வமாக அறிமுகபடுத்தபட்டனர்..

ஆனால், படத்தின் நாயகன் அஜித்தின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியிடாமல் அஜீத் புகைபடத்தில் கேள்வி குறியுடன் போஸ்டரை வெளியிட்டனர்.

இந்த சர்ஃப்ரைசை சற்றும் எதிர்பார்க்காத அஜீத் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் கூடியது என்றே சொல்லலாம்..

படக்குழுவினர் அறிவித்தபடி, இன்று ( 31-12-2022) மாலை சரியாக 7.00 மணிக்கு துணிவு படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தில் அதிரடி காட்டி வருகிறது..

துணிவு ட்ரைலரில் அஜீத் தலைமையில் வங்கியை கொள்ளை அடிப்பதற்காக ஒரு கேங்க் வங்கிக்குள் நுழைகிறது. வங்கியில் இருக்கும் எல்லோரையும் பணய கைதிகளாக்கி வங்கியை தங்கள் கட்டுபாட்டில் வைத்து கொள்கிறார்கள்..

மக்கள் பணத்தை இப்படி கொள்ள அடிக்கிறியே உனக்கு வெக்கமா இல்லையா ? என நடிகர் பிரேம் குமார் கேள்வி கேட்க முகத்தில் இருக்கும் மாஸ்க்கை கலட்டி இல்ல என பதிலக்கும் அஜித்தின் எண்ட்ரி படத்தின் ட்ரைலர் சுவார்யசத்தை கூட்டுகிறது..

வரும் பொங்களுக்கு திரைக்கு வர இருக்கும் அஜித்தின் துணிவு பட ட்ரைலர் இணையத்தை கலக்கி வருகிறது.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !