AK 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது டைட்டிலே Mass-ஆ இருக்கே !
Last Updated on September 21, 2022 by Dinesh
அஜீத் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ak 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் இன்று வெளியாகி ட்ரெண்ட்டிங்கில் உள்ளது..

நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட வெற்றி படங்களுக்கு பின்னர் தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் எச்.வினோத், .
அஜீத் குமார் ஆகியோர் மூன்றாவது முறையாக இணையும் ak 61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று மாலை வெளியிட்டனர்..
கடந்த ஏப்ரல் மாதம் ஹைத்ராபாத்தில் தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் ஹெச். வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஜீத் குமார் நடிக்கும் 61 வது படத்தின் படபிடிப்பு பூஜையுடன் தொடங்கபட்டது..

இந்த படத்திற்காக நடிகர் அஜீத் வெள்ளை தாடியுடன் கூடிய ஸ்டைலிஷ் ஆன தோற்றத்தில் இருக்கும்
புகைபடங்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகவும் பரவியது..
இதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக நடிகர் அஜீத் தனது பைக்கில் சுற்றுலா பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

லண்டன் மற்றும் ஈரோப் நாடுகளில் பைக் பயணம் செய்து வரும் அஜீத் குமார் சமீபத்தில் இந்தியாவின் எல்லை பகுதியாக இருக்க கூடிய லடாக் பகுதிகளில்,
அஜீத் மேற்கொண்ட பைக் பயணத்தின் வீடியோ இணையத்தில் பெரும் வைரலானது..
இந்நிலையில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் ak 61 படத்தின் டைட்டில் துணிவு என்று வைக்கபட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது படக்குழு..
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜீத் வெள்ளை தாடி மற்றும் தலைமுடியுடன் ஒரு நாற்காலியில் துப்பாக்கி கையில் பிடித்தபடி ஸ்டைலாக அமர்ந்து இருக்கிறார்..
மேலும் போஸ்டரில் துணிவு என்ற டைட்டிலுக்கு சப் டைட்டிலாக no guts no glory endra டைட்டிலும் இடம் பெற்றுள்ளது..
அஜித்தின் துணிவு திரைப்படம் வங்கி கொள்ளையை மையமாக கொண்டு எடுக்கபடும் திரைப்படம் என கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தில் அஜீத் இரு வேடங்களில் நடித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது..
தயாரிப்பாளர் போனி கபூரின் தயாரிப்பு நிறுவனமான bay view projects மற்றும் zee studios இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்க்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்..
துணிவு படத்தின் அடுத்த கட்ட படபிடிப்பு பாங்காக்கில் நடைபெற இருப்பதாக தெரிகிறது..
இந்த படபிடிப்பானது நடிகர் அஜீத் தனது பைக் பயணத்தை இன்னும் ஓரிரு நாட்களில் முடித்த பின்னர் படபிடிப்பு பணிகள் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது..
ரசிகர்கள் வெகு நாட்களாக எதிர்பார்த்து இருந்த அஜித்தின் 61 வது படத்தின் டைட்டில் இன்று வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் துணிவு என்ற ஹஸ்டாக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.