வைரலாகும் அண்ணாத்த படத்தின் மோஷன்…

வைரலாகும் அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பஞ்ச் டைலாக்குகள்..

வைரலாகும் அண்ணாத்த படத்தின் மோஷன்...
Rajini Kanth

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த அண்ணாத்த திரைபடத்தின் மோஷன் போஸ்டர் நேற்று மாலை வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தர்பார் படத்திற்க்கு பிறகு ரஜினி நடிக்கும் திரைப்படம் அண்ணாத்த. .

இத்திரைபடத்தை இயக்குனர் சிவா இயக்கத்தில் டி. இமான் இசையமைக்க இதனை சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த திரைபடத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. அதில் இசையமைப்பாளர் டி. இமான் அண்ணாத்த என்ற டைலாக்குடன் அவர் கொடுத்திருக்கும் இசை ரஜினி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

கடந்த வெளியான இந்த டைட்டல் லுக் போஸ்டர் இணையத்தில் இது வரை 7 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து வருகின்றது.

Annatthe Title Motion Poster

மேலும் இந்த டைட்டில் லுக்கை 2 லட்சத்திற்க்கும் அதிகமானோர் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

இத்திரைபடம் கடந்த பொங்களுக்கு திரை அரங்குகளில் வெளி வர இருந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக இருந்ததின் காரணமாக தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டு திரை அரங்குகள் மற்றும் வணிக வளாகங்கள் என அனைத்தும் செயல்பட தமிழக அரசு தடை விதித்தது.

இதனால் அண்ணாத்த திரைப்படம் முடிவு செய்யபட்ட தேதியில் வெளியிட முடியாமல் படத்தின் வெளியீட்டு தேதியை தள்ளி போட்டது படக்குழு.

வைரலாகும் அண்ணாத்த படத்தின் மோஷன்…

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியான நேற்று ரஜினி ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக அண்ணாத்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் . மற்றும் படம் வெளியாகும் தேதி ஆகியவற்றை அதிகாரபூர்வமாக வெளியானது.

மேலும், இதை தொடர்ந்து பஸ்ட் லுக் வெளியான சிறிது நேரத்திலே அண்ணாத்த மோஷன் போஸ்டர் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர் நிறுவனம் அறிவிப்பை அறிவித்தது.

அதன் படி, நேற்று மாலை சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த அண்ணாத்த படத்தின் போஸ்டரும் வெளியானது.

யுட்யூப் தளத்தில் வைரலாகும் அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் சிறிது நேரத்திலே டிரண்டிங்கில் இடம் பிடித்தது.

மேலும் அதில் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசும் பஞ்ச் வசனங்களும் ரஜினி ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.

இதனிடையே நேற்று மாலை யுட்யூப் தளத்தில் அண்ணாத்த மோஷன் போஸ்டர் கடந்த 24 மணி நேரத்தில் 2.7 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 2 லட்சத்திற்க்கும் அதிகமான லைக்குகளை இந்த மோஷன் போஸ்டர் இதுவரை பெற்றுள்ளது..

வரும் 2021 தீபாவளிக்கு திரைக்கும் வரும் அண்ணாத்த திரைபடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மேலும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ஜாக்கி ஷிரோப்ஃப், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார் படத்திற்க்கு வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்த படத்திற்க்கு எடிட்டராக ரூபன் பணியாற்றியுள்ளார்..

Annatthe Motion Poster

Exit mobile version