கருப்பட்டி கரைச்சி செஞ்சு வச்ச சிலையா ?

கருப்பட்டி கரைச்சி செஞ்சு வச்ச சிலையா ? என்ற அழகிய வரிகளுடன் விருமன் திரைபடத்தின் லிரிகள் வீடியோ பாடல் வெளியானது..

கருப்பட்டி கரைச்சி செஞ்சு வச்ச சிலையா ?
karthi 7 aditi shankar

இயக்குனர் முத்தையா நடிகர் கார்த்தி ஆகியோர் இரண்டாவது முறையாக இணையும் திரைப்படம் விருமன். இதற்கு இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லக்ஷ்மி மேனன், ராஜ் கிரண், கோவை சரளா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த கொம்பன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது..

இதை தொடர்ந்து தற்போது மீண்டும் நடிகர் கார்த்தியை வைத்து விருமன் திரைபடத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் முத்தையா. விருமன் திரைபடத்தில் கார்த்தி, அதிதி சங்கர் , பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, கருணாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் இப்படத்தில் நடிக்கின்றனர்..

விருமன் படத்தினை 2D Entertainment நிறுவனத்தின் மூலம் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

மேலும் படத்திற்க்கு கூடுதல் பலமாக யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்..

இப்படத்தில் எடிட்டராக வெங்கட் ராஜன் ஒளிப்பதிவாளராக செல்வகுமார் எஸ்.கே ஆகியோர் பணியாற்றியுள்ளனர்..

விருமன் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் தெரிவித்திருந்த நிலையில் அறிவித்தபடி கஞ்சா பூவு கண்ணால என்ற பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது..

பாடலாசிரியர் கருமத்துர் மணிமாறன் எழுதிய கஞ்சா பூவு கண்ணால பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் பாடகர் சித் ஸ்ரீராம் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்..

யுவன் சங்கர் ராஜாவின் மெல்லிசையில் ஆராவாரம் இல்லாமல் ஒரு அழகிய மெல்லிசை பாடலாக கஞ்சா பூவு கண்ணால பாடல் அமைந்துள்ளது..

இப்பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இசையில் கேட்போரின் மனதை இலகுவாக்குவதாக மற்றும் பாடல் வரிகள் நன்றாக உள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. .

விருமன் படத்தின் முதல் பாடல் Kanja Poovu Kannala padal கீழே கொடுக்கபட்டுள்ளது கேட்டு மகிழுங்கள்.

கருப்பட்டி கரைச்சி செஞ்சு வச்ச சிலையா ?

Exit mobile version