ஜாதி பெருமை பேசியிருக்கிறதா? நட்டி நட்ராஜ் நடித்திருக்கும் குருமூர்த்தி படம்

இயக்குனர் தனசேகர் பழனிவேலு இயக்கத்தில் நட்டி நட்ராஜ் பூனம் பஜ்வா முதலில் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் குருமூர்த்தி..

gurumurthy movie release date
gurumurthy

கர்ணன் திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தவர் நட்டி நட்ராஜ். கர்ணன் படத்தில் தான் எடுத்து கொண்ட கதாபாத்திரம் நெகட்டிவ் கதாபாத்திரம் என்றாலும் மிக சிறந்த முறையில் தன் எதார்த்த நடிப்பை வெளிபடுத்தி பலரையும் வியக்க வைத்தவர்..

தற்போது நட்டி நட்ராஜ் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.பி. தனசேகர் இயக்கத்தில் குருமூர்த்தி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நட்டி நட்ராஜ், பூனம் பஜ்வா, சஞ்சனா சிங், ராம்கி, மனோ பாலா, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தினை ஃபிரண்ட்ஸ் டால்க்ஸ் நிறுவனத்தின் சார்பாக சிவ சலபதி மற்றும் சாய் சரவணன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்..

இந்த படத்தின் தலைப்பு சூர்யா நடிப்பில் வெளிவந்து மிக பெரிய ஹிட் அடித்த ஜெய் பீம் திரைபடத்தில் சரச்சையை கிளப்பிய குருமூர்த்தி என்ற பெயரின் தலைப்பையே இந்த படத்தில் குருமூர்த்தி சர்ச்சைக்கு அப்பாற்பட்டவன் என வைக்கபட்டுள்ளது..

ஜெய் பீம் ( jai bhim )

கடந்த 2021 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய் பிம் திரைப்படம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது.

டி.ஜே.ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பல விருதுகளை வாரி குவித்தது.

அது மட்டுமின்றி சினிமா உலகில் மிக உயர்ந்த விருதாக கருதபடும் ஆஸ்கார் விருதின் பட்டியலில் ஜெய் பீம் திரைப்படம் இடம் பெற்றிருந்தது.

உலகம் முழுவதும் பல்வேறும் நாடுகளில் ஜெய் பீம் திரைப்படம் திரையிடபட்டதை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்னர் சீனாவிலும் ஜெய் பீம் திரைப்படம் வெளியிடபட்டது.

சீனாவின் திரையரங்குகளில் ஜெய் பீம் படத்தினை பார்த்து சீன மக்கள் கண்ணீர் மல்கியதை நாம் அனைவரும் பார்த்திருப்போம்.

ஆனால், தமிழகத்தில் ஜெய் பீம் படத்திற்க்கு பெருமளவு ஆதரவு இருந்த போதிலும்,

ஒரு தரப்பில் இருந்து ஜெய் பீம் படத்தில் இடம் பெற்ற கதாபாத்திரத்தின் பெயர் குறித்து எதிர் விமர்சனங்களை முன் வைத்தனர்.

அதாவது, உண்மை சம்பவத்தை அடிபடையாக கொண்டு எடுக்கபட்ட ஜெய் பீம் படத்தில் வில்லனாக காட்டபடும் போலீஸ் கதாபாத்திரத்திற்க்கு,

நிஜத்தில் இருந்த உண்மையான பெயரை வைக்காமல் ஒரு சமுதாயத்தை சேர்ந்த முக்கியமான நபரின் பெயரை வேண்டுமென்றே படத்தின் இயக்குனர் வைத்துவிட்டதாக எதிர் தரப்பில் குற்றசாட்டுக்கள் வைக்கபட்டு வந்தன..

இந்த சர்ச்சைக்கு பெருப்பேற்று படத்தின் இயக்குனரும் தகுந்த விளக்கம் அளித்தது குறிப்பிடதக்கது..

குருமூர்த்தி

சூர்யா நடித்த ஜெய் பீம் படத்தில்வில்லன் கதாபாத்திரத்திற்க்கு குருமூர்த்தி என்ற பெயர் வைத்ததின் காரணமாகவே இந்த படத்தில் கதாநாயகனுக்கு குருமூர்த்தி என்றும் சப் டைட்டிலில் சர்ச்சைக்கு அப்பாற்பட்டவன் என்ற பெயரை வைத்ததாக சினிமா வட்டாரத்தில் கூறுகின்றனர்.

மேலும் இப்படத்தில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் பெயரை பயன்படுத்தியதாகவும் அதனை தணிக்கை குழுவிற்க்கு அனுப்பிய பின் சென்சார் போர்டு நிராகரித்து படத்திற்க்கு யு/ஏ சான்றிதழ் வழங்கபட்டுள்ளதாகவும் நம்பக தகுந்த சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது..

எதிர்ப்பார்ப்பை கிளப்பி இருக்கும் குருமூர்த்தி படம் வரும் டிசம்பர் 9 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. கீழே குருமூர்த்தி படத்தின் ட்ரைலர் கொடுக்கபட்டுள்ளது கண்டு கழியுங்கள்..

Exit mobile version