Tamil CinemaUpdates
Trending

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்த ஜெய்லர் படக்குழு

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் 73-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ஜெய்லர் படக்குழு வெளியிட்ட மாஸ் வீடியோ இதோ…

jailer rajinikanth
rajinikanth

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினி காந்த். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, பெங்காளி, கன்னடா, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் எல்லாம் நடித்து புகழ் பெற்றவர்..

இந்திய சினிமாவில் அனைத்து மொழி சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகர்கள் பட்டியலில் நிச்சயம் ரஜினிகாந்த் பெயர் இருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவிற்க்கு மொழிகளை கடந்து சினிமா ரசிகர்களை 40 ஆண்டிற்க்கும் மேலாக ஒரு நடிகர் கவர்ந்து வருகின்றார் என சொன்னால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என எல்லோருக்கும் தெரியும்..

சினிமா மூலம் பலரது நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இன்று காலை முதலே ரசிகர்கள், சினிமா துறையில் முக்கிய நடிகர், நடிகைகள்,

அரசியல் தலைவர்கள் என பல தரப்பில் இருந்து ரஜினி காந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் வந்த வண்ணம் உள்ளன..

இதனை தொடர்ந்து, தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெய்லர் படக்குழுவும் ரஜினி பிறந்த நாளை கொண்டாடும் விதமாகவும்,

அவருடைய ரசியகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாகவும் ஒரு அதிரடியான வீடியோ ஒன்றை வெளியீட்டு உள்ளனர்..

ஜெய்லர் படத்தில் முத்துவேல் பாண்டியனாக நடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் மாஸ் என்ட்ரி வீடியோ கீழே கொடுக்கபட்டுள்ளது தவறாமல் கண்டு கழியுங்கள்..

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !