ஓடிடியில் இன்று வெளியான தமிழ் படங்கள்…

ஓடிடியில் இன்று வெளியான தமிழ் படங்கள் என்ன என்ன படங்கள் தெரியுமா?

ஓடிடியில் இன்று வெளியான தமிழ் படங்கள்
Anushka Shetty

கொரோனா தொற்று அச்சம் காரணமாக தமிழகத்தில் தியேட்டர்கள் அனைத்தும் மூடபட்டு இருக்கின்றன. இந்த நிலையில் ஏற்கனவே ரிலீஸ்க்கு தயாராக இருந்த பெரிய முதல் சிறிய தமிழ் படங்கள் அனைத்தும் திரைக்கு கொண்டு வர முடியாமல் தவித்து போய் உள்ளனர் படகுலுவினர்.

இதனிடையே நடிகை ஜோதிகா நடிப்பில் உருவான பொன்மகள் வந்தால் திரைப்படம் முதன் முதலில் தமிழ் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் எழுந்தது இருப்பினும் அப்படம் ஓடிடியில் வெளியானது.

இதை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான குயின் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என தகவல் வெளியானது பின்னர் அப்படமும் ஓடிடியில் வெளியானது

ஓடிடியில் இன்று வெளியான தமிழ் படங்கள்…

இதன் வரிசையில் மேலும் சில படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அந்தந்த படகுலு அறிவித்தது. அதில் பெரிய பட்ஜ்ஜெட்டில் எடுக்கபட்ட திரைப்படம் சூரறை போற்று இப்படமும் ஓடிடியில் வெளியாகும் என நடிகர் சூர்யா சமீபத்தில் அறிவித்து இருந்தார் மேலும் அவர் கூறிருப்பதாவது.

இதனால் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். சூரறை போற்று ஓடிடி தளத்தில் வெளியாவது குறித்து ரசிகர்கள் பலர் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வந்தனர்.

இருப்பினும் படக்குழு திரைபடத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவது என முடிவு செய்தது. இது சம்பந்தமாக நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்காக அறிக்கை ஒன்றை வெளியீட்டு விளக்கதையும் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கும், திரையுலகை சார்ந்தவர்களுக்கும் தன்னலம் பாராமல் கொரோனா யுத்த களத்தில்முன்னின்று பணியாற்றுபவர்களுக்கும் இந்த 5 கோடி ரூபாய் பகிர்தலிக்கபடும் என அறிவித்து இருந்தார்..

க/பெ.ரணசிங்கம் திரைப்படம்

இதை தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் க/பெ.ரணசிங்கம் திரைப்படம்.

இன்று ஓடிடி தளத்தில் வெளியானது இதற்கான அறிவிப்பும் ஏற்கனவே படகுளு அறிவித்து இருந்தது..

மேலும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .இந்த படத்தில் விஜய் சேதுபதி குறைந்த நேரம் மட்டுமே திரையில் வருவார்.

பின் படத்தின் நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷ் சுற்றி கதை நகர்கிறது இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்து இருப்பார்.

படத்தை பி.விருமாண்டி இயக்கி இருப்பார் ஜிப்ரான் இசையமைக்கிறார் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

நிசப்தம் திரைப்படம்

நடிகை அனுஷ்கா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் நிசப்தம் இப்படம் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ் என ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது..

இதில் மாதவன், அஞ்சலி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து இருக்கின்றனர் இந்த படத்தின் உரிமையை சமீபத்தில் அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியதாக தகவல்கள் வெளியானது .

பின்னர் நிசப்தம் படகுளு அதிகாரபூர்வகமாக நிசப்தம் .திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என அறிவித்தது.

இதனை தொடர்ந்து இன்று நிசப்தம் திரைப்படம் ஓடிடியில் வெளியானது படத்தை ஹேமந்த் மதுக்கர் இயக்குகிறார், கிரீஸ் ஜி இசையமைக்கிறார், கோனா வெங்கட் மற்றும் டிஜி விஷ்வா பிரசாத் படத்தை தயாரித்துள்ளனர்.

Exit mobile version