valimai : ரிலீஸ் தேதியால் உற்சாகத்தில் ரசிகர்கள் வலிமை அப்டேட்டை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்..

நேர் கொண்ட பார்வை திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளிவந்தது.
இத்திரைபடத்தில் அமிதாப் பச்சன், டாப்ப்ஸீ பன்னு, கிரீத்தி குல்கர்னி, ஆன்ட்ரியா டரியங்கா ஆகியோர் நடித்து இருந்தனர்.
பாலிவுட்டில் மிக பெரிய வரவேற்பை பெற்ற இத்திரைபடம் அங்கு வசூலையும் குவித்து வந்தது. ஹிந்தியில் பிங்க் படத்தினை இயக்குனர் அனிருதா ராய் சௌதரி படத்தை இயக்கினார் ரோண்ணீ லகிரி, ராஷ்மி ஷர்மா, ஷீல் குமார் ஆகியோர் பிங்க் படத்தினை தயாரித்து இருந்தனர்.
இதனை அடுத்து பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் உரிமத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் பெற்றார்.
அதனை தொடர்ந்து தமிழில் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜீத் குமார் நடிப்பில் நேர் கொண்ட பார்வை திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது.
இத்திரைபடத்தில் நடிகர் அஜீத் குமாரின் நடிப்பும், படத்தில் அவர் பேசிய வசனங்களும் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.
குறிப்பாக அஜீத் ரசிகர்கள் இடையே அஜித்தின் வசனங்களும், நடிப்பும் மிகுந்த வரவேற்பை பெற்று இணையத்தில் பாராட்டை பெற்றது.
நேர் கொண்ட பார்வை நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து மீண்டும் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் (thala60 )அஜீத் குமார் 60 வது படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிப்பதாக அறிவிப்புகள் வெளிவந்தன.
இந்த அறிவிப்பானது கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான போது அஜீத் ரசிகர்கள் இடையே மிகுந்த உற்சாகத்தை கிளப்பியது.
இந்த மூவரின் கூட்டணி மீண்டும் உருவானதால் அஜித்தின் ரசிகர்களுக்கு தல60 படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது.
மேலும், இதை தொடர்ந்து ட்விட்டர் மற்றும் மற்ற சமூக வலைத்தள பக்கங்களில் thala60 என்ற ஹஸ்டாக் உருவாக்கி இணையத்தில் வைரலாக்கி வந்தனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட வலிமை படத்தின் படபிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வந்த வேலையில் கொரோனா பரவல் காரணமாக படபிடிப்புகள் பாதியிலே நின்றது.
இதனை அடுத்து கொரோனா கால கட்டத்தில் வலிமை படத்தின் அப்டேட் குறித்து அறிவிப்புகள் எதுவும் இணையத்தில் வெளியிடபடாமல் இருந்தது. இது அஜீத் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்தது.
ஆகையினால் அஜீத் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் #valimaiupdate என்ற ஹஸ்டாக் உருவாக்கி அதில் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர்களுக்கு தங்களது வேண்டுகோளை தொடர்ந்து முன்வைத்து வந்தனர் அஜீத் ரசிகர்கள்.
valimai : ரிலீஸ் தேதியால் உற்சாகத்தில் ரசிகர்கள்
அதன் பிறகு, அஜீத் ரசிகர்களை உற்சாகமூட்டும் வகையில் வலிமை படத்தின் பஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்களை வெளியிட்டார் தயாரிப்பாளர் போனிகபூர் மற்றும் படக்குழுவினர்..
பின்னர் அதை தொடர்ந்து பிப்ரவரி மாதம் வலிமை சாங் ஒன்றை வெளியீட்டு அஜீத் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது படக்குழு..
இதை தொடர்ந்து வலிமை படத்தின் எந்த அப்டேட் வெளிவராத நிலையில் இன்று திடீரென்று படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது வலிமை படக்குழுவினர்.
வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வலிமை திரைப்படம் வரும் 2022 பொங்களுக்கு திரைக்கு வரும் என்று அதிகார்பூர்வமாக அறிவித்துள்ளார்.
திடீரென வெளியான இந்த அறிவிப்பில் அஜீத் ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் valimaipongal, valimai போன்ற ஹஸ்டாக் உருவாக்கி ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.