Tamil CinemaUpdates
Trending

அதிரடி அதிரடி இது தீ தளபதியின் சரவெடி

தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் இரண்டாவது பாடல் குறித்த சூப்பரான அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகபடுத்தி உள்ளது..

varisu movie download
varisu

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் திரைபடத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு..

இப்படத்தினை பிரபல தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிபல்லி இயக்கி வருகிறார். தெலுங்கில் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜூவின் தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் வாரிசு படத்தினை தயாரித்து வருகிறது..

மேலும், வாரிசு படத்திற்க்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கையில் படத்தின் எடிட்டராக பிரவீன் கே.எல் மற்றும் ஒளிப்பதிவாளராக கார்த்திக் பழனி ஆகியோர் படத்தில் பணிபுரிந்துள்ளனர்..

மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகும் வாரிசு திரைபடத்தில் தளபதி விஜய், ராஷ்மிகா மந்தன்னா, பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், சரத் குமார், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே வாரிசு திரைபடத்தில் இணைந்து நடித்துள்ளனர்..

வரும் 2023 பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கும் வாரிசு திரைபடத்தின் முதல் பாடலாக ரஞ்சிதமே ரஞ்சிதமே என தளபதி விஜய் பாடிய பாடல் ஏற்கனவே யுட்யூப் தளத்தில் வெளியாகி சக்க போடு போட்டு வரும் நிலையில் இன்று வாரிசு படத்தின் இரண்டாவது பாடல் குறித்த புதிய அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது..

தமிழ் சினிமா உலகில் 30 வருடங்களாக அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய்.

இளைய தளபதியாக இருந்த பொழுதிலும் சரி தற்போது தளபதியாக இருக்கும் பொழுதும் சரி,

அன்றும், இன்றும் விஜய்யை கொண்டாடுவதற்கு ரசிகர்கள் பட்டாளம் கூடி கொண்டே செல்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை..

தற்போது தளபதி விஜய்யின் 30 வருட சினிமா பயணத்தை கொண்டாடி வரும் ரசிகர்களை உற்சாகபடுத்தும் விதமாக,

வாரிசு படத்தின் படக்குழுவினர் வாரிசு படத்தின் இரண்டாவது பாடல் அறிவிப்பாகும் தேதியை 30yearsofvijayism என்ற ஹஸ்டாக்கை பயன்படுத்தி வெளியிட்டுள்ளது..

வாரிசு படத்தின் இரண்டாவது பாடல் தீ தளபதி வரும் டிசம்பர் 4 ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !