பயமா இருக்கா இனிமே தான் பயங்கரமா இருக்கும்

பயமா இருக்கா இனிமே தான் பயங்கரமா இருக்கும் என்ற அதிரடியான வசனங்களுடன் வெளியானது விஜய்யின் பீஸ்ட் படத்தின் டிரைலர்…

பயமா இருக்கா இனிமே தான் பயங்கரமா இருக்கும்
Thalapathy Vijay

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைபடத்தின் டிரைலர் ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கிடையில் இன்று மாலை 6.00 மணிக்கு அதிகாரபூர்வமாக யுட்யூப் தளத்தில் வெளியிடபட்டது…

வரும் ஏப்ரல் (13.04.2022) அன்று beast திரைப்படம் திரைக்கு வரும் நிலையில் இன்று அப்படத்தின் டிரைலர் படக்குழுவினரால் வெளியிடப்பட்டு இணையத்தை கலக்கி வருகிறது.

ஏற்கனவே இப்படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய இரண்டு பாடல்கள் இணையத்தில் வெளியாகி சக்க போடு போட்டு வருகிறது..ஜாலியோ ஜிம்கானா பீஸ்ட் இரண்டாவது பாடல்

இந்த இரண்டு பாடல்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது படத்தின் டிரைலரும் வெளியாகி இணையத்தில் அதிவேகமாக ட்ரெண்ட் ஆகி வருவதால் பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் பல சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது..beast :வெளிநாட்டு உரிமத்தை கைபற்றிய நிறுவனம்

படத்தின் டிரைலரில் தளபதி விஜய் கொடுக்கும் மாஸ் என்ட்ரி, பேசும் வசனங்கள் என ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது beast trailer. இப்படத்தில் விஜய் வீரராகவன் என்ற கதாபாத்திரத்தில் முதன் முதலில் விமான போர் வீரனாக வலம் வருகிறார்..தளபதி விஜய் நடனத்தில் கலர்ஃபுல்லான பாடல் இதோ

இது வரை இயக்குனர் செல்வராகவன் பீஸ்ட் படத்தில் நடிக்கும் கதாபாத்திரத்தை படத்தின் போஸ்டர் மற்றும் புகைப்படங்களில் வெளிக்காட்டாமல் சர்ப்ரைஸ் ஆக வைத்திருந்தனர் படக்குழுவினர்..

தற்போது டிரைலரை பார்க்கும் பொழுது செல்வராகவன் பீஸ்ட் திரைபடத்தில் அரசு உயர் அதிகாரியாக வருவது போன்று தெரிகிறது..

மேலும், டிரைலரில் தளபதி விஜய் நடிகர் யோகி பாபுவிடம் ..”என்ன பயமா இருக்கா இதுக்கு அப்பறம் இன்னும் பயங்கரமா” இருக்கும் என்ற வசனம் பேசும் பொழுது அதற்க்கு யோகி பாபுவின் ரியாக்சன் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது..

ரசிகர்களின் பேராதரவுடன் வெளியான பீஸ்ட் திரைபடத்தின் டிரைலர் சிறிது நேரத்திலே இணையத்தில் வேகமாக பகிரபட்டு டிரெண்டிங்கில் இடம் பிடித்தது.

யுட்யூப் தளத்தில் இது வரை 4.4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து 1.1 மில்லியன் லைக்குகளை அள்ளி வருகிறது..

டிரைலர் மூலம் பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பி இருக்கும் பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது..

கீழே beast Trailer கொடுக்கபட்டுள்ளது கண்டு மகிழுங்கள்…

Exit mobile version