Tamil CinemaUpdates

KRK Trailer : வெளியானது KRK படத்தின் டிரைலர்

KRK Trailer : காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டிரைலர் இணையத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது..

Vijay Sethupathi, Nayanthara, Samantha movie release date
samantha & nayanthara

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா, பிரபு, ரெடின் கிங்க்ஸ்லே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்..

இப்படத்தின் படபிடிப்பு பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் பாடல்கள் ரெண்டு காதல் (Rendu Kadhal),

டூ டூ டூ (Two Two Two ), நான் பிழை (Naan Pizhai ), டிப்பம் டப்பம் (Dippam Dappam ) ஆகிய நான்கு பாடல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது..

வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இத்திரைபடத்தின் டிரைலர் இன்று மாலை வெளியிடப்படும்.

என படக்குழுவினர் தெரிவித்து இருந்த நிலையில் தற்போது அறிவித்தபடி காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டிரைலர் இன்று (22.04.2022) மாலை வெளியிடப்பட்டது..

படத்தின் டிரைலரில் கதாநாயகன் விஜய் சேதுபதி நாயகிகளான நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோரை ஒரே சமயத்தில் காதலிக்கிறார்..

இதனால் கதாநாயகன் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை காமெடி கலந்த காதல் படமாக எடுக்கபட்டுள்ளது…

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தினை தயாரிப்பாளர் எஸ்.எஸ் . லலித் குமாருடன் இணைந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும்

நயன்தாரா ஆகியோரது நிறுவனமான ரௌடி பிக்சர் ஸ்‌ (Rowdy Pictures ) படத்தினை தயாரிக்கிறது..

மேலும், படத்திற்க்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் இசையமைக்கிறார். படத்தின் ஒளிப்பதிவாளராக எஸ். கதிர் மற்றும் விஜய் கார்த்தி கண்ணன், எடிட்டராக ஏ. ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் படத்தில் பணியாற்றியுள்ளனர்..

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் தமிழக திரை அரங்கு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது..

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டிரைலரில் தமிழ் வெர்ஷனில் வெளியான 2 மணி நேரத்தில் 1.4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது..

கீழே KRK படத்தின் டிரைலர் இணைக்கபட்டுள்ளது கண்டு மகிழுங்கள்…

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !