Tamil CinemaUpdates

சிபிராஜ் நடிப்பில் உருவான கபடதாரி டீசர் வெளியானது…

சிபிராஜ் நடிப்பில் உருவான கபடதாரி டீசர் வெளியாகி இணையத்தில் இன்று வைரலாகி வருகிறது..

ஏ.ஆர். ரகுமான் வெளியிட்ட சிபிராஜ் படத்தின் டீசர்
sibiraj

நடிகர் சிபிராஜ் நடிப்பில் உருவான ரங்கா, வட்டம் ஆகிய திரைபடத்திற்கு பிறகு அவர் நடிக்கும் ‘கபடதாரி’ படத்தின் டீசர் இன்று வெளியானது இதனை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது வெளியிவலைதளத்தில்இன்று வெளியிட்டார்.

‘கபடதாரி’ திரைபடத்தை கடந்த வருடம் பூஜையுடன் துவங்கி வைத்தார் நடிகர் சிவகுமார். பின்னர் கடந்த மாதம் நடிகர் சிபிராஜ் பிறந்தநாளன்று இப்படத்தின் பஸ்ட் லூக் போஸ்டர் வெளியானது

இதனை நடிகர் சூர்யா .சிபி ராஜ்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கபடதாரி படத்தின் போஸ்டரை வெளியிட்டார்.

இப்படம் இந்த வருடம் மே மாதம் திரைக்கு வர இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் தியேட்டர்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் மூடப்பட்டு இருந்ததால் படத்தின் வெளியீட்டு தேதியை தள்ளி போட்டனர் படக்குழுவினர்..

பின்னர் தமிழக அரசு விதிமுறைகளுடன் கூடிய தளர்வுகளை திரைதுறைக்கு வழங்கியது. அதன் படி, சூட்டிங் பணிகளை மேற்கொள்ளும் போது 50 நபர்களுக்கு இருக்க கூடாது.

கட்டாயம் அனைவரும் முககவசம், தனி மனித இடைவெளி போன்ற கட்டுபாட்டு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என ஆணையிட்டது. அதன் அடிபடையில் கபடதாரி படத்தின் டப்பிங் பணிகள் மேற்கொள்ளபட்டன..

தற்போது கொரோனா பரவல் அச்சம் காரணமாக தமிழக அரசு திரை அரங்குகள் திறப்பதற்கு கடும் விதிமுறைகளுடன் கூடிய தளர்வுகளை அளித்து இருக்கிறது.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் கோடியில் ஒருவன்…

திரை அரங்குகளில் 50% இருக்கைகள் மட்டும் அனுமதிக்கபடுகின்றன மேலும் திரை அரங்குக்கு வருபவர்கள் மாஸ்க் அணிவித்தல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பிறகு ஏற்கனவே திரைக்கு வர இருந்த படங்கள் அனைத்தும் தற்போது ரிலீசுக்கு தயாராகி கொண்டு இருக்கிறது.

அதன் வரிசையில் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ள கபடதாரி படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, ஜெய பிரகாஷ், சுமந்த் ரங்கநாதன் ஆகியோர் நடித்து உள்ளனர்.

நடிகர் நாசர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் இவர் கபடதாரி படத்தின் டப்பிங் பணிக்காக தனது சம்பளத்தில் 15% சதவீத்தை குறைத்து கொள்வதாக அறிவித்து இருந்தார்.

ஏ.ஆர். ரகுமான் வெளியிட்ட சிபிராஜ் படத்தின் டீசர்
A.R. Rahuman

ஏ, ஆர். ரகுமான் வெளியிட்ட கபடதாரி டீசரில் நடிகர் சிபிராஜ் ட்ராஃபிக் போலீஸ் அதிகாரியாக வருகிறார். மேலும் படத்தில் கொலை குற்றம் ஒன்றில் நடிகர் சிபிராஜ் புலன் விசாரணை செய்வது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சுயரூபத்தை மாற்ற பல வேஷம் போடும் ‘கபடதாரி’ எனும் வசனம்மும் இடம் பெற்றுள்ளது. கபடதாரி விருவிருப்பான த்ரில்லர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார் தனஞ்செயன் தயாரிக்கிறார். படத்திற்கு ஒளிபதிவாளர் ராசாமதி மற்றும் எடிட்டர் பிரவீன் கே.எல். உள்ளனர்.

படத்தின் டீசரை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் #kabadathaari என்ற ஹஸ்டாக் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் இப்படம் விரைவில் திரைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !