Last Updated on September 18, 2024 by Dinesh
உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் வியட்நாமில் நேற்று திறக்கபட்டு மக்கள் பயன்பாட்டிற்க்கு வந்துள்ளது..

வியட்நாமில் மக்களை கவரும் விதமாகவும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையிலும் அங்கு கண் கவரும் வகையில் பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன..
அந்த வகையில், வியட்நாம் நகரில் மிகவும் பிரசத்தி பெற்ற கோல்டன் பாலம் மற்றும் டிராகன் பாலம் பலரது கவனத்தை ஈர்க்கும் வகையில் கட்டபட்டுள்ளது.
இதில் கோல்டன் பாலம் 490 அடியில் சுமார் 150 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் இரண்டு கைகள் தாங்கிபிடிக்கும் வகையில் மிக நேர்த்தியாக கட்டபட்டுள்ள கோல்டன் பாலம் எஃகு வர்ணம் பூசப்பட்ட தங்கத்தினால் கட்டபட்டுள்ளதாக கூறப்படுகிறது..

வியட்நாம் பாலங்களில் மற்றுமொரு சிறப்பசமாக விளங்கும் ட்ராகன் பாலம் ஹன் நதியின் இருகரைகளை இணைக்கும் பாலமாக 660 அடியில் சுமார் 200 மீட்டர் நீளத்தில் அமைக்கபட்டுள்ளது. இந்த பாலத்தில் மஞ்சள் நிறத்தில் முழு ட்ராகன் உருவம் பாலத்தின் துவக்கம் முதல் இறுதி வரையில் அமைக்கப்ட்டு இரவு நேரத்தில் டிராகனில் வண்ணமயமான விலகுகளால் கண் கவரும் வகையில் அமைந்துள்ளது..
இந்த வரிசையில் தற்போது வியட்நாமில் உலகிலே மிக நீளமான கண்ணாடி பாலத்தை வெற்றிகரகமாக கட்டிமுடித்து மக்கள் பயன்பாட்டிற்க்கு வந்துள்ளது. இந்த கண்ணாடி பாலமானது 492 அடி உயரத்தில் 632 அடி நீளத்தில் கட்டபட்டுள்ளது..
இதே போன்று சீனாவில் குவாங் டாங் மாகாணத்தில் சுமார் 526 மீட்டர் நீளம் கொண்ட கண்ணாடி பாலம் தான் உலகின் நீளமான பாலமாக இருந்து வந்தது.
ஆனால் தற்போது வியட்நாமில் கட்டபட்டுள்ள கண்ணாடி பாலம் உலகின் மிக நீளமான பாலம் என்ற பெயரை பெற்றது மட்டுமின்றி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடமும் பெற்றது.
வியட்நாமில் புதியதாக கட்டப்பட்ட இந்த கண்ணாடி பாலத்தில் ஒரே நேரத்தில் சுமார் 450 பேர் வரை இதில் பயணிக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் இது வியட்நாம் சுற்றுலா பயணிகளை மிகவும் கவரும் வகையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.