Last Updated on July 30, 2021 by Dinesh
IPL2020 CSKvsKKR :சென்னை மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபுதாபியில் இன்றைய போட்டியில் விளையாடுகின்றன.

IPL2020 சீசன் 13-இல் இன்று 21-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதும் போட்டி இன்று இரவு இந்திய நேரப்படி 7.30 மணிக்கு தொடங்கியது.
IPL2020 CSKvsKKR :சென்னை மற்றும் கொல்கத்தா
இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
இந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதன் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் விளையாடுகிறது.
கடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(kkr) டெல்லியுடன்(DC) மோதியது அதில் முதலில் விளையாடிய டெல்லி 20. ஓவருக்கு 228 -க்கு 4-விக்கெட்களை கொடுத்தது.
229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பலமான இலக்குடன் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18-ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல் அணியிடம் தோல்வியுற்றது.
பஞ்சாப்பை வீழ்த்துமா சென்னை சூப்பர் கிங்ஸ்…
இந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது 5 போட்டியை தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் விளையாடி வருகிறது. கொல்கத்தா அணி வீரர்களின் பட்டியியல்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(KKR Team)
தினேஷ் கார்த்திக்(கேப்டன்), ஷூப்மன் கில், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா,சுனில் நாறினே,மோர்கன், ஆண்ட்ரூ ரஸ்ஸல்,பட் கம்மின்ஸ், கம்லேஷ் நாகற்கொடி, சிவம் மாவி, வருண் சக்ரவர்தி ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
கொல்கத்தா அணியின் பேட்டிங் விவரம்(KKR Batting)
முதலில் களம் இறங்கிய ஷூப்மன் கில் 4-வது ஓவர் 2வது பந்தில் தாகூர் வீசிய பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து 11 ரன் அடித்து அவுட் ஆனார்.. பின்னர் 2 வதாக களமிறங்கிய நிதிஷ் ராணா 10 பந்துகளில் வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
இவரை தொடர்ந்து ஆடிய சுனில் நரினே 9. பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார் தலா ஒரு சிக்சர் மற்றும் ஒரு ஃபோர் உடன் தனது ஆட்டத்தை இழந்தார்.
பின்னர் ஆடிய வீரர்கள் மோர்கன் மற்றும் ரஸ்ஸல் உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் 11 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். இவர் சிஎஸ்கே அணியின் பந்து வீச்சாளர் தாகூர் வீசிய பந்தில் தனது விக்கெட்டை இழந்தார்.
இதனை தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 167 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது அணியில் அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 51 பந்துகளில் 81 ரன்களை குவித்தார்.
மேலும் ராகுல் திரிபாதி 8ஃபோர்கள் மற்றும் 3 சிக்சர்கள் அடித்துள்ளார். தற்போது கொல்கத்தா அணி ஐபிஎல் சீசன் 13 தரவரிசை பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றால் ஐபிஎல் சீசன் 13 புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்துக்கு நகர்ந்து விடும்.
20ஓவருக்கு நிர்ணயிக்கபட்ட 168 ரன்களை டார்கெட்டாக கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது.