மாஸ்டர் படம் எப்போ தியேட்டர்க்கு வரும்?
Last Updated on September 2, 2022 by Dinesh
மாஸ்டர் படம் எப்போ தியேட்டர்க்கு வரும்? தளபதி விஜய் நடிக்கும் 64 படம் ‘மாஸ்டர் ‘ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.
அட்லீ உடனான கூட்டணியில் நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ திரைபடத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’ இப்படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் முதன் முறையாக விஜய்-யுடன் கூட்டணி சேருகிறார்.
இப்படத்தின் ஆரம்ப கால கட்டத்தில் இருந்தே படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிகழ்ந்து வந்தது.
இதனை தொடர்ந்து ‘மாஸ்டர்’ படத்தின் ஒரு பாடலை விஜய் ரசிகர்களுக்காக குட்டி ஸ்டோரி எனும் பாடல் மாஸ்டர் படகுழுவால் வெளியிடப்பட்டது. அப்பாடல் வெளியான சிறிது நேரத்திலே இணையத்தில். ஹிட் அடித்து ட்ரெண்டிங் ஆனது.
யுட்யூப் தளத்தில் வெளியாகியுள்ள மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி லிரிகள் வீடியோ பாடலில், நடிகர் விஜய் நடனமாடும் விதமான புகைபடங்களுடன் கூடிய வீடியோவாக வெளியாகியுள்ளது.
இந்த பாடல் முழுவதும் நடிகர் விஜயை போன்று கார்ட்டூன் வடிவில் உருவாக்கி அதனை நடனமாட வைத்து இருப்பார்கள்.
இது விஜய் ரசிகர்களை மட்டுமல்ல பார்க்கும் அனைவரையும் ஈர்க்கும் வகையில் குட்டி ஸ்டோரி லிரிகள் வீடியோ பாடலை உருவாக்கி இருக்கிறார்கள்.
அருண்ராஜா காமராஜ் எழுதியிருக்கும் இப்பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். வெகு நாட்கள் கழித்து தளபதி விஜய்யின் குரலில் வெளியாகி இருக்கும் குட்டி ஸ்டோரி எனும் பாடல் விஜய் ரசிகர்களை உற்சாகபடுத்தி உள்ளது.
இதனை தொடர்ந்து இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரபட்டு லைக்க்குலையும், கமெண்ட்களையும் இப்பாடல் பெற்று வருகிறது.
மேலும், இது தளபதி விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து மாஸ்டர் படத்தை தியேட்டரில் காண ரசிகர்களும் ஆவலுடன் இருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி படக்குழுவினர் அறிவித்தனர்
இத்திரைபடம் வரும் ஏப்ரல் 9-ம் தேதி திரைக்கு வரும் என அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக தமிழக அரசு மாநிலம் முழுவதும் 144- தடை உத்தரவை பிறப்பித்தது இதை தொடர்ந்து தியேட்டர் உளிட்ட அணைத்து நிறுவனங்களும் மூடப்பட்டது.
திரைக்கு வர இருந்த அனைத்து திரைப்படங்களின் தேதிகளும் ஒத்திவைக்கப்பட்டது.
மாஸ்டர் படம் எப்போ தியேட்டர்க்கு வரும்?
வரும் தீபாவளிக்குள் தொற்று கட்டுக்குள் வந்துவிட்டால் தீபாவளி அன்று மாஸ்டர் திரைபடம் வெளியாகுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் பதில் அளித்திருக்கிறார். தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது. ‘மாஸ்டர்’ படம் சிறப்பாக எடுக்கப்பட்டு இருக்கிறது.
மாஸ்டர் படம் எப்போ தியேட்டர்க்கு வரும்? படத்தின் ரிலீஸ் பொறுத்தவரை கொரோனா தொற்றின் நிலையை பொருத்தும் மற்றும் தியேட்டர்கள் தொறந்த பின் தான் முடிவு செய்யப்படும் அது தீபாவளிக்கா, பொங்கலுக்குகா என தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
OTT- தளத்தில் மாஸ்டர் வெளியாகுமா என்ற கேள்விக்கும் பதில் அளித்தார் மாஸ்டர் திரைப்படம் பெரிய பட்ஜெட் படம், அதுமட்டுமில்லாமல் விஜய்-யும் தியேட்டர் திறந்த பின்னர் படத்தின் ரிலீஸ் என உறுதியாக இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்