Etharkkum Thunindhavan: ‘சும்மா சுர்ருனு’ பாடல்
Last Updated on January 16, 2022 by Dinesh
Etharkkum Thunindhavan: ‘சும்மா சுர்ருனு’ என்ற கலக்கலான பாடல் இன்று அதிகாரபூர்வமாக இணையத்தில் வெளியானது…

கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம் திரைபடத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் எதற்கும் துணிந்தவன்.
இத்திரைபடத்தினை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குனர் பாண்டி ராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் மூலம் முதன் முறையாக இயக்குனர் பாண்டி ராஜ் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோரது கூட்டணி இணைந்துள்ளது.
எதற்கும் துணிந்தவன் படத்தின் முதல் போஸ்டர் வெளியான நாள் முதல் இருந்தே ரசிகர்கள் மத்தியில் ET படத்திற்க்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது.
இந்த நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்திற்க்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதிய வாடா தம்பி என்ற பாடல் முதல் பாடலாக கடந்த மாதம் வெளியிடபட்டது.
அதனை தொடர்ந்து ET படத்தின் இரண்டாவது பாடலான உள்ளம் உருகுதையா என்ற பாடலை பாடலாரிசிரியர் யுகபாரதி எழுதிய பாடல் இணையத்தில் வெளியானது.
Etharkkum Thunindhavan: ‘சும்மா சுர்ருனு’ பாடல்
இவ்விரண்டு பாடல்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தின் சும்மா சுர்ருனு என்ற மூன்றாவது பாடல் இன்று வெளியாகி உள்ளது.
ET படத்தின் சும்மா சுர்ருனு என்ற. கலக்கலான மூன்றாவது பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி உள்ளார். மேலும் இப்பாடலுக்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையில் பாடகர்கள் அர்மான் மாலிக் மற்றும் நிகிதா காந்தி ஆகியோர் பாடியுள்ளனர்.
சுமார் 3.43 நிமிடங்கள் அடங்கிய ‘சும்மா சுர்ருனு’ என்ற இப்பாடலை இன்று மாலை 6.00 மணிக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் யுட்யூப் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த பாடல் வெளியான சிறிது நேரத்திலே ஐந்து லட்சம் பார்வையாளர்களை கடந்து ரசியக்ர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் தயாராகி வரும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம். வரும் பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி திரைக்கு வருகிறது என்ற அறிவிப்பு ஏற்கனவே அறிவிக்கபட்டுள்ளது எனப்து குறிப்பிடத்தக்கது..
கீழே சும்மா சுர்ருனு என்ற பாடல் இணைக்கபட்டுள்ளது பார்த்து மகிழுங்கள் :