Last Updated on October 9, 2022 by Dinesh
தமிழ் தொலைகாட்சி ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் தமிழ் சீசன் 6 செப்டெம்பர் 09 ஞாயிறு மாலை 6.30 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது..

கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் தொலைகாட்சியில் தொடங்கபட்ட பிக்பாஸ் தமிழ் சீசன் 1 நல்ல வரவேற்பை தொடர்ந்து வருடந்தோராம் ஒவ்வொரு சீசனாக வெற்றிகரமாக நடத்தபட்டு வருகிறது..
அதை தொடர்ந்து இந்த வருடத்திற்க்கான பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அறிவிப்பும் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியது. இதற்கு காரணம் பிக்பாஸ் குழு நடைபெற இருக்கும்,
பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள ரசிகர்கள், பொதுமக்கள் ஆகியோர் விண்ணப்பம் மூலம் விண்ணப்பிக்கலாம் அவ்வாறு விண்ணப்பம் செய்வோர்களை பிக்பாஸ் குழு தேர்வு செய்து நிகழ்ச்சியில்
கலந்து கொள்ளும் வாய்ப்பினை வழங்கும் என்ற அறிவிப்பினை வெளியிட்ட பின் பிக்பாஸ் சீசன் 6 -இன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்பட்டு வந்தது..
இதை தொடர்ந்து, பிக்பாஸ் தமிழ் சீசன் 6-இன் போட்டியாளர்கள் தேர்வு செய்யபட்டு அவர்களை பிக்பாஸ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்வதுடன் நிகழ்ச்சியும் கோலாகலமாக இன்று தொடங்கியது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த 5 சீசன்களை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல் ஹாசன் தற்போது பிக்பாஸ் பிகழ்ச்சியின் 6-வது சீசனையும் தொகுத்து வழங்குகிறார்..
கோலாகலமாக தொடங்கிய பிக்பாஸ் தமிழ் 6-இன் முதல் போட்டியாளராக இணைய புகழ் ஜிபி முத்து தேர்வு செய்யபட்டு பிக்பாஸ் வீட்டினுள் சற்று முன் நுழைந்தார்.