Cinema NewsKollywood

அனல் தெறிக்கும் வசனங்களுடன் ET Teaser

Last Updated on February 18, 2022 by Dinesh

அனல் தெறிக்கும் வசனங்களுடன் ET Teaser இன்று மாலை அதிகாரபூர்வமாக வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது…

அனல் தெறிக்கும் வசனங்களுடன் ET Teaser
surya

இயக்குனர் பாண்டி ராஜ் இயக்கத்தில் முதன் முறையாக நடிகர் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் திரைபடத்தினை சன் பிக்சர்ஸ்‌ நிறுவனம் தயாரித்துள்ளது.

இத்திரைபடமானது நடிகர் சூர்யாவிற்க்கு 40 வது திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் ஆரம்ப கட்ட முதலில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது.

கடந்த 2020 ஆம் ஆண்டு சன் பிக்சர்ஸ்‌ நிறுவனம் இயக்குனர் பாண்டி ராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் 40 வது திரைபடத்தை தயாரிக்க உள்ளதாக அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வெளியாகின..

அதனை தொடர்ந்து படத்தின் படபிடிப்பு பணிகளும் சென்னையில் தொடங்கி நடைபெற்று வந்தது..

இதற்கிடையில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக எதற்கும் துணிந்தவன் திரைபடத்தின் படபிடிப்பு பணிகள் தடைபட்டது.

பின் நாட்களில், கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து பின்பு ET படத்தின் படபிடிப்பு பணிகள் மீண்டும் துவங்கபட்டன. இப்படத்தின் படபிடிப்பு பணிகள் காரைக்குடி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று உள்ளது.

மேலும் ET படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு பணிகள் குற்றாலத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் ஆகிய பணிகள் கடந்த நவம்பரில் தொடங்கி டிசம்பர் மாதம் இறுதியில் முடிவடைந்து படம் ரிலீஸ்க்கு தயாராகி கொண்டிருந்தது..

எதற்கும் துணிந்தவன் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடபட்டது.

இது நடிகர் சூர்யாவின் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் இணையத்திலும் ட்ரெண்ட் ஆக வலம் வந்தது..

ஏற்கனவே எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 4 (2022) ஆம் தேதி திரைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில்,

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக தமிழக அரசு திரை அரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கி இருந்தது.

பின்னர், கொரோனா பரவல் தொற்று அதிகரித்தன் காரணமாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்தது படக்குழு.

அனல் தெறிக்கும் வசனங்களுடன் ET Teaser

இதனிடையே தற்போது சூர்யா ரசிகர்களை உற்சாகபடுத்தும் விதமாக இன்று சன் பிக்சர்ஸ்‌ நிறுவனம் ET டீசர் மாலை வெளியாகும் என்ற அறிவிப்பினை வெளியிட்டது.

அறிவித்தபடி இன்று (18.02.2022) மாலை 6.30 மணியளவில் யுட்யூப் தளத்தில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் வெளியிடபட்டது.

இதனுடன் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கபட்டுள்ளதால் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் இணையத்தில் டீசரை பகிருந்து தற்போது கொண்டாடி வருகின்றனர்..

அனல் தெறிக்கும் வசனங்களுடன் ET டீசரில் நடிகர் சூர்யாவின் சில சண்டை காட்சிகளுடன் மிரட்டலான வசனங்களும் ரசிகர்களை கவர்ந்து வருவதுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் இந்த டீசரின் மூலம் அதிகரித்துள்ளது..

வரும் மார்ச் 10 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாகும் எத்ற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் கீழே இணைக்கபட்டுள்ளது பார்த்து மகிழுங்கள்…

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !