Cinema NewsKollywood

Suriya 42 படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகை இவர் தான்

Last Updated on August 20, 2022 by Dinesh

நடிகர் சூர்யா நடிக்கும் தனது 42 படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்குகிறார். இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

Suriya 42 படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகை இவர் தான்
suriya & suriya 42 team

சமூக வலைத்தளங்களில் இன்று காலை முதல் டிரெண்டிங்கில் கலக்கி வரும் செய்தி என்னவென்றால் அது நடிகர் சூர்யா நடிக்கும் 42 படத்தின் புதிய அப்டேட்கள் பற்றி தான்..

நடிகர் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் தனது 42 படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே பேசப்பட்டு வந்த நிலையில் இன்று அதனை உறுதி செய்யும் விதமாக பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது..

suriya 42 படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார் படத்திற்க்கு இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க போவதாக.வும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது..

இதை தொடர்ந்து, இயக்குனர் சிறுத்தை சிவா மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் இணைந்து நிற்க்கும் புகைபடத்தினை சூர்யா ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து தங்களுக்கு சூர்யா 42 படத்தின் மேலும் பல அப்டேட்கள் வேண்டும் என ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்..

இது மட்டுமின்றி கூடுதல் தகவலாக சூர்யா 42 படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி (disha patani ) நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது..

இதற்க்கு முன் சூர்யா திஷா பதானி ஆகிய இருவரும் இணைந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் விளம்பர படம் ஒன்றில் நடித்துள்ளனர். தற்போது அந்த விளம்பர பட வீடியோவை சமூக வலைத்தளங்களில் சூர்யா ரசிகர்கள் பதிவிட்டு suriya42 என்ற ஹஸ்டாக் ட்ரெண்ட் செய்தும் வருகிறார்கள்.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !