Last Updated on October 13, 2022 by Dinesh
திருநங்கையை கொடூரமாக தாக்கும் வீடியோ ஒன்று நேற்று முதல் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி கடும் கண்டனங்களை பெற்று வந்தது..

நேற்று முதல் பார்ப்பவர்களின் மனதை உருக்குவது போன்று சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று உலாவி வந்தது.
அந்த வைரல் வீடியோவில் இரண்டு இளைஞர்கள் சேர்ந்து இரண்டு திருநங்கைகளை ஆளில்லாத பகுதியில் கண் மூடி தனமாக தாக்கும் வீடியோ பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தனர்..
வீடியோவில் திருநங்கையை தாக்கும் நபர் அந்த திருநங்கையின் தலைமுடியை கத்தரித்து விட்டு இப்ப எப்படி இருக்கு beautiful என கை தட்டி சிரிக்கும் படியாக உள்ளது. இச்சம்பவத்தை உடன் வந்திருந்த மற்றொரு இளைஞர் செல்போனில் படபிடித்து கொண்டிருக்கிறார்..
இந்த நபர்கள் கண்மூடி தனமாக தாக்கியத்தில் திருநங்கையின் முகம் வீங்கி காயங்களுடன் இருக்கும் வீடியோவால் பலதரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன..
இச்சம்பவம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் வன்னி அரசு, இப்படி அறக்கதனமாகவும்,
இழிவாகவும் செயல்படும் இந்த சமூக விரோதிகளை தமிழ்நாடு காவல் துறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என தனது கண்டனத்தை தெரிவித்தார்..
மேலும், திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரான தமிழச்சி தங்கபாண்டியன், அனைத்து விதமான வன்முறைகளில் இருந்தும் அனைத்து பெண்களும் பாதுகாக்கபட வேண்டும்
தூத்துக்குடி மாவட்டம் கழுமலையில் திருநங்கைகள் மீது நடத்தபட்ட வன்முறை மற்றும் வெறுப்புணர்வை பார்க்கும் போது மிகவும் கவலையாக உள்ளது..
இந்த தாக்குதலை நான் வன்மையாக கண்டிப்பதோடு தமிழ்நாடு காவல் துறைக்கு வேண்டுகோள் விடுகிறேன். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இவர்கள் மீது கடுமையான நட்வடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார்..
இதை தொடர்ந்து, வைரல் வீடியோவை கொண்டு விசாரணை நடத்திய காவல் துறை சம்பந்தபட்ட நபர்களை கண்டுபிடித்தனர்.
இது குறித்து தென் மண்டல ஐஜி ஆஸ்ரா கர்க் கூறுகையில் பாதிக்கபட்டவர்கள் மற்றும் குற்றம் இழைத்தவர்களை கண்டுபிடித்துள்ளோம். காணொளியில் கண்ட இரண்டு நபர்களும் கைது செய்யபட்டனர் என தெரிவித்துள்ளார்..