varisu படத்தில் விஜய் கேரக்டர் இதான் வெளியான தகவல்
Last Updated on July 20, 2022 by Dinesh
தளபதி விஜய் நடிக்கும் thalapathy 66 படமான வாரிசு படத்தின் ரூசிகர தகவல் இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது..

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தன்னா, பிரபு, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் திரைபடத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது..
தற்போது வாரிசு படத்தின் படபிடிப்பு பணிகள் ஹைத்ராபாத்தில் விருவிருப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் வாரிசு படபிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் ஒரு பில்டிங்கின் மேற்பரப்பில் நடந்து கொண்டு இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் பரவி ட்ரெண்ட் ஆகி வருகிறது..
இதனிடையே வாரிசு படத்தில் நடிகர் விஜய் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயரும்,படத்தில் விஜய்யின் கேரக்டர் குறித்த தகவலும் வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது..
வாரிசு படத்தில் தளபதி விஜய் ( விஜய் ராஜேந்திரன் ) என்ற பெயரில் ஆப் டிசைனர் (App Desinger) ஆக கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..
இன்று ஒரே நாளில் தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் கதாபாத்திரம் மற்றும் கதாபாத்திரத்தின் பெயர்,
ஆகியவை வெளியானதை அடுத்து விஜய்யின் ரசிகர்கள் இணையத்தில் உற்சாகமாய் இந்த தகவலை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்..
வாரிசு திரைப்படம் வரும் 2023 பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து இருப்பது குறிபிடதக்கது.