ரசிகர்களின் பாராட்டு மழையில் நித்யா மேனன்
Last Updated on August 20, 2022 by Dinesh
நடிகர் தனுஷ் நடிப்பில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் தனுஷ்க்கு தோழியாக நடித்திருக்கும் நித்யா மேனனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றது..

திருச்சிற்றம்பலம் படத்தில் நடிகர் தனுஷ், ராசி கண்ணா, ப்ரியா பவானி ஷங்கர், நித்யா மேனன், பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ், முனிஷ் காந்த் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து உள்ளனர்..
இத்திரைபடம் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரை அரங்குகளில் வெளியானது.
இதில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள திரை அரங்குகளில் நடிகர் தனுஷின் ரசிகர்கள் திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீசை முன்னிட்டு ஆரவாரங்களுடன் கொண்ட கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.. Thiruchitrambalam : நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் படம் திரை அரங்கில்
காரணம், நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு கர்ணன் திரைப்படம் திரை அரங்கில் வெளியானது. கர்ணன் படதிதிற்க்கு தனுஷின் தி க்ரே மேன், ஜகமே தந்திரம், உள்ளிட்ட படங்கள்
நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. இதையடுத்து ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரையில் தனுஷ் படம் வெளியாகுவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தே காணபட்டது..
இதை தொடர்ந்து திருச்சிற்றம்பலம் படமும்.. ரசிகர்களிடையே தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று வருவதுடன் வசூல் ரீதியாகவும் கலெக்ஷனை அள்ளி வருகிறது இத்திரைபடம்..
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் இசையில் வெளியாகி இருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடிகை நித்யா மேனன் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களையும் தாண்டி
வெகுஜன மக்களையும் ஈர்த்து வருவதாகவும் ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் நடிகை நித்யா மேனனை பாராட்டி வருகின்றனர்.