vivo x70 pro price in india : இதோ அதன் முழு விவரம்
Last Updated on October 18, 2021 by Dinesh
vivo x70 pro price in india : விவோ புது மாடல் மொபைல் நாளை இந்தியாவில் வெளியாக உள்ளது.

இந்தியாவில் நாளை விவோ மாடல் மொபைல்களின் இரண்டு புது மொபைல் மாடல்கள் வெளிவர இருக்கின்றன. அதற்கான அறிவிப்பும் அதிகாரபூர்வமாக விவோ நிறுவனம் அறிவித்துள்ளது.
நாளை இந்தியாவில் விற்பனைக்கு வெளி வர இருக்கும் vivo x70 மற்றும் vivo x70 pro plus ஆகிய இரு மொபைல்களின் விலை குறித்து இன்னும் அதிகாரபூர்வமாக விவோ நிறுவனத்தால் வெளியிடபடாத நிலையில் தற்போது இவற்றின் விலைகள் குறித்து இணையத்தில் வெளியாகியுள்ளது.
Vivo x70 full specification
இதில் vivo x70 (specification) இரண்டு வித ஸ்டோரேஜ் அமைப்புகளை கொண்டதாக வெளிவர இருக்கிறது. அதில் ஒன்று 8 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் அமைப்பை கொண்டது.
மற்றும் ஒரு வகை மாடலில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என கலக்கலான வடிவைப்பில் வெளிவருகிறது. 6.56 inch டிஸ்ப்ளே அளவை கொண்ட இந்த மொபைல் மாடல் ரெஃப்ரெஷ் ரேட் 120 எச்ஜெட் ஆக கொடுக்கபட்டுள்ளது.
இதன் பேட்டரியை பொறுத்தவரை 4,400 mah அளவை கொடுத்திருக்கின்றனர். மொபைலில் சார்ஜ் செய்யும் பொழுது இது 44w ஸ்பீட் சார்ஜர் திறனை கொண்டது என கூறப்படுகிறது
கேமராவை பொறுத்தவரை இவற்றின் பின்பக்கத்தில் மூன்று கேமராக்கள் கொடுக்கபட்டுள்ளன.
அதில் முதல் கேமரா 40 மெகா பிக்சலை கொண்டுள்ளது இரண்டு மற்றும் மூன்றாவது கேமராக்களில் 12 மெகா பிக்சல் கேமராக்கள் பொருத்தபட்டுள்ளன.
மேலும், இவற்றின் முன்பக்க கேமராவில் 32 மெகா பிக்சல் வைட் ஆங்கில் பிரைமரி கேமராவாக கொடுக்கபட்டுள்ளது.
vivo x70 plus specification
இதனுடன் வெளியாகும் மற்றுமொரு மொபைல் மாடல் vivo x 70 pro plus மொபைல் ஆனது 6.78 inch டிஸ்ப்ளே அளவை பெற்றுள்ளது. இதன் டிஸ்ப்ளே மேற்புறத்தில் கொர்நிங்க் கொரில்லா கிலாஸ் அமைப்புடன் 120 எச்ஜெட் ரெஃப்ரெஷ் ரேட் அளவை கொடுத்திருக்கின்றனர்.
இந்த மாடல் மொபைலில் 12 ஜிபி ரேம் உடன் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதி கொண்டது.
டைப் சி வகை கொண்ட இந்த மொபைலின் பேட்டரி அளவு 4500mah அளவை பெற்றுள்ளது. மேலும் இது சார்ஜரில் 55w ஸ்பீட் சார்ஜ் திறன் கொண்டது என கூறப்படுகிறது.
ரெட்மி நியூ மாடல்- Redmi Note 10s விற்பனைக்கு வந்துள்ளது…
விவோ x70 ப்ரோ பிளஸ் மொபைலின் பின்புறத்தில் நான்கு கேமராக்கள் கொடுக்கபட்டுள்ளன. அவைகள் முதல் கேமராவாக 50 மெகா பிக்சல், இரண்டு மற்றும் மூன்றாவது கேமராவில் 12 மெகா பிக்சல் கேமராக்களும் நான்காவது கேமராவில் 8 மெகா பிக்சல் கேமராவும் கொண்டுள்ளது.
இந்த மொபைலின் முன்பக்க கேமரா விவோ x70 மொபைலில் கொடுக்கபட்டதை போலவே விவோ x70 ப்ரோ பிளஸ் மொபைலிலும் 32 மெகா பிக்சல் கேமராவை கொண்டுள்ளது..
vivo x70 pro price in india : இதோ அதன் முழு விவரம்
நாளை இந்தியாவில் 12 மணியளவில் வெளியாயாக போகும் இந்த மொபைல்களின் விலை தற்போது ஆன்லைனில் லீக் ஆகி உள்ளது.
அதாவது vivo x70 மொபைலின் விலை 46,990 எனவும் மற்றுமொரு மொபைலான vivo x70 pro plus மொபைலின் விலை 69,990 எனவும் இணயத்தில் லீக் ஆகியுள்ளது.
இந்த மொபைல்களின் உண்மையான விலை நாளை அதிகாரபூர்வமாக வெளியாகும் போது தான் தெரியவரும்.