Last Updated on May 14, 2022 by Dinesh
IPL : தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்த வீரர் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான அம்பத்தி ராயுடு இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து தாம் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார்..
அம்பத்தி ராயுடுவின் இந்த திடீர் பதிவால் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
கடந்த 2001-02-இல் ரஞ்சி டிராபி தொடரில் தனது 16 வயதில் ஹைத்ராபாத் அணிக்காக விளையாடி தன் கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார்..
இதை தொடர்ந்து 2004-05 முதல் ஹைத்ராபாத் அணிக்கும் 2005 முதல் 2006 வரை ஆந்திராபிரதேஷ் அணிக்கும் விளையாடியுள்ளார்.
பிறகு மீண்டும் 2006 முதல் 2010 வரையில் ஹைத்ராபாத் அணிக்காக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுதியுள்ளார்..
பின்னர், 2010ஆம் ஆண்டு இந்தியன் பிரிமியர் லீக் (IPL Match ) போட்டிகளில் விளையாடுவதற்காக முதன் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யபட்டார் அம்பத்தி ராயுடு..
ஐபிஎல் போட்டிகளில் 2010 முதல் 2017 ஆகிய காலகட்டங்களில் முதன் முதலாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அம்பத்தி ராயுடு 2018 ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமானார்..
அம்பத்தி ராயுடு இதுவரை 55 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி 1,694 ரன்களை பெற்றுள்ளார்.
மேலும் ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை இது வரையில் மொத்தம் 255 போட்டிகளை எதிக்கொண்டுள்ளார்..
ஐபிஎல் போட்டியில் அம்பத்தி ராயுடு 255 போட்டிகளில் விளையாடி 5,489 ரன்களை அடித்துள்ளார்..
இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்க்கு எதிரான ஒரு நாள் சர்வதேச போட்டியில் பங்கு பெற்றார்..
இதை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சென்னை அணிக்காக விளையாடி வரும் அம்பத்தி ராயுடு இன்று தனது சமூக வலைதளத்தின் மூலம் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தது ரசிகர்களுக்கு ஆதிர்ச்சியை ஏற்படுத்தியது..
ஆனால், சிறிது நேரத்திலே அந்த பதிவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார் அம்பத்தி ராயுடு.
முதலில் ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டு பின்னர் அந்த பதிவினை நீக்கம் செய்தது ஐபிஎல் ரசிகர்களிடையே தற்போது பெரும் குழப்பத்தை உருவாக்கியுள்ளது.