இணையத்தை கலக்கும் அருண்விஜயின் யாணை
Last Updated on December 24, 2021 by Dinesh
இணையத்தை கலக்கும் அருண்விஜயின் யாணை படத்தின் 1மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது..

நடிகர் அருண் விஜய் முதன் முறையாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்கும் திரைப்படம் யாணை. இப்படத்தில் அருண் விஜய், ப்ரியா பவானி ஷங்கர், பிரகாஷ் ராஜ், சமுத்திரகணி, யோகி பாபு, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இத்திரைபடத்தின் பஸ்ட் லூக் போஸ்டர் கடந்த செப்டெம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி அன்று படக்குழுவினரால் வெளியிடபட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
யாணை படத்தின் படபிடிப்பு மூன்று கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. மேலும் இப்படத்தின் டப்பிங் பணிகளும் சமீபத்தில் தான் நிறைவு பெற்றுள்ளது. இதில் நடிகர் அருண் விஜய் மற்றும் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்,
ஆகியோர் படத்தில் டப்பிங் மேற்கொள்ளும் புகைப்படங்கள் வைரலாகி படத்திற்க்கு ரசிகளிடம் இருந்து வாழ்த்துக்களும் வந்த வண்ணம் இருந்தன.
இதனை தொடர்ந்து டிசம்பர் 23 ஆம் தேதி படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்து யாணை படத்தின் படக்குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்து இருந்தனர். அதன் படி, நேற்று ( டிசம்பர் 23 ) யாணை படத்தின் டீசர் அதிகாரபூர்வமாக வெளியிடபட்டது.
இணையத்தை கலக்கும் அருண்விஜயின் யாணை
படத்தின் டீசர் துவக்கத்தில் பாம்பன் பாலம் ஒரு கடல் இரு கரை என துவங்ககி ஒரு சிறிய சண்டை காட்சிகள் படத்தின் டீசரில் இடம் பெற்றுள்ளன.
அதை தொடர்ந்து படத்தின் டீசர் இறுதியில் இவனுக்கு தூக்கி சுமக்கவும் தெரியும் தூக்கி போட்டு மிதிக்கவும் தெரியும் என பஞ்சு வசனங்களுடன் முடிகின்றது.
யாணை படத்தின் டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 1.4 மில்லியன் பார்வையாளர்களை யுட்யூப் தளத்தில் இது வரை பார்க்கபட்டுள்ளது.
இப்படத்தின் டீசரை பார்த்த ரசிகர்கள் படம் வெற்றி பெற தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Drumsticks productions தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
மேலும் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களை சினேகன், ஏகாதசி, அறிவு உள்ளிட்டோர் எழுதி உள்ளனர்.
கீழே யாணை படத்தின் டீசர் இணைக்கபட்டுள்ளது பார்த்து மகிழுங்கள்…