Last Updated on November 9, 2022 by Dinesh
உதயநிதி ஸ்டாலின் நெஞ்சுக்கு நீதி படத்திற்க்கு பிறகு இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடித்து வருகிறார்..

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், கலையரசன், பிக்பாஸ் புகழ் ஆரவ், அங்கனா ராய் உள்ளிட்ட பலர் நடிக்கும் கலகத் தலைவன் திரைபடத்தின் டீசர் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் யுட்யூப்பில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது..
கலகத் தலைவன் படத்தின் டீசரை யுட்யூப் தளத்தில் இரண்டு வாரங்களில் 1.1M மில்லியன் பார்வையாளர்களை கடந்து வருகிறது..
இந்த நிலையில் கலகத் தலைவன் படத்தில் இடம் பெற்றுள்ள ஹே புயலே என்ற மெலோடியான பாடல் இன்று மாலை 4.00 மணிக்கு வெளியாகும் என படக்குழு முன்னதாகவே அறிவிப்பு செய்திருந்தது..
அதன் படி, சரியாக இன்று மாலை 4.00 மணி அளவில் ஹே புயலே பாடல் படக்குழுவினரால் வெளியிடபட்டது.
இந்த பாடலை ஸ்ரேயா கோஷல் மற்றும் சத்ய பிரகாஷ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்..
அரோல் கோரேலி இசையில் கார்க்கி எழுதிய ஹே புயலே பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..
கலகத் தலைவன் திரைப்படம் வரும் நவம்பர் 18-ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாக உள்ளது.