NewsTamilnadu

காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம்…

Last Updated on October 5, 2021 by Dinesh

காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் மறைந்த பாடகர் எஸ்‌பி.பாலசுப்ரமணியம் உடல் செய்யபடும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி அனுமதிக்கபட்டார் எஸ்‌பி பாலசுப்ரமணியம்.

பின்னர் கடந்த சில தினங்களில் அவருக்கு உடல் நிலை மோசமனதை தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வந்தது.

காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம்
sp balasubramaniyam

இதை தொடர்ந்து அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக தினமும் தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருந்தன.

இவை செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்தே அவரின் உடல் நிலை பற்றிய தகவல்கள் நல்ல முறையில் வெளிவந்தன இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென உடல் நிலை மறுபடியும்

மோசமனதை அடுத்து மருத்துவர்கள் உயிர் காக்கும் கருவிகளுடன் இரவு முழுவதும் தீவிர சிகிச்சை கொடுத்து வந்தனர் இருப்பினும் எஸ்‌பி பாலசுப்ரமணியதின் உயிர் சிகிச்சை பலனின்றி பிரிந்தது.

இந்த செய்தியை அறிந்த திரைத்துறை மற்றும் அரசியல் பிரபலங்கள் அனைவரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். பாடகர் எஸ்‌பி. பாலசுப்ரமணியம் எம்ஜிஆர், ரஜினி, கமல், விஜய், அஜீத் என பல முன்னணி நடிகர்களுக்கு பல பாடல்களை பாடியுள்ளார்..

இவர் பாடிய பாடல்களை கேட்டு ரசிக்காதவர்களே இருக்க முடியாது என்று கூட சொல்லலாம். இரவுகளில் இவரின் மென்மையான குரலில் பாடிய மெலோடி பாடல்களை கேட்டு ரசிக்கும் ரசிகர் பட்டாளம் இன்றும் இவருக்கு உண்டு.

காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம்…

மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில்.

திராவிட முன்னேற்ற கழக தலைவரும் எதிர் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின்

பாடும் நிலா எஸ்‌பி பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவை கோடிக்கணக்கான ரசிகர்கள் தம் சொந்த குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பாகவே கருதுகிறோம்.

மன அழுத்ததுக்கு இயற்கையான மாமருந்து அவர்! தம்பி சரனுக்கும் குடும்பதினருக்கும் எனது ஆறுதல்!

இனிய குரலால் என்றென்றும் உயிர்த்திருப்பார் எஸ்‌பி‌பி. என அவர் குறிப்பிட்டு தனது இரங்கலை தெரிவித்து இருந்தார்.

மேலும் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

தமிழர்களின் நெஞ்சில் நிறைந்தவராக அரை நூற்றாண்டு காலம் புகழோடு விளங்கி பத்மஸ்ரீ-பத்மபூஷண் விருதுகள் பெற்ற எஸ்‌பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இறுதி பயணம் உலகெங்கிலும் வாழும்

ரசிகர்களின் உணர்வுகள் மதிக்கும் விதமாக முழு அரசு மரியாதையுடன் நடைபெற தமிழக முதல்வர் ஆவன செய்ய வேண்டும் என தெரிவித்து இருந்தார்..

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கள் இடம் பிடித்த திரு.எஸ்‌பி பாலசுப்ரமணியம் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும்.

வகையில் அன்னாருக்கு காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யபடும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவிதுள்ளார்..

இதை தொடர்ந்து எஸ்‌பி பாலசுப்ரமணியம் உடல் செங்குன்றத்தில் அவரது சொந்த வீட்டில் அடக்கம் செய்ய கோடம்பாக்கக்தில் இருந்து செங்குன்றதிற்கு அவரின் உடல் எடுத்து செல்லபட்டுவிட்டது..

இதை அடுத்து நாளை காலை 11 மணி அளவில் அவரது இல்லத்தில் காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யபடுவதாக உள்ளது.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !