NewsTv

ஸ்லீவ்லெஸில் இணையத்தை கலக்கும் ரச்சிதா

Last Updated on April 5, 2022 by Dinesh

ஸ்லீவ்லெஸில் இணையத்தை கலக்கும் ரச்சிதா மகாலக்ஷ்மியின் ( Rachitha Mahalakshmi ) புகைபடங்கள் தற்போது வைரலாக பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது…

ஸ்லீவ்லெஸில் இணையத்தை கலக்கும் ரச்சிதா
Rachitha Mahalakshmi

பிரபல தனியார் தொலைகாட்ச்சியான விஜய் டி‌வியில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஒளிப்பரப்பட்ட பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம்,

தமிழ் தொலைகாட்சியில் அடியெடுத்து வைத்தார். தமிழில் தனது முதல் சீரியலான பிரிவோம் சந்திப்போம் தொடரில் ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார்..

முதல் சீரியலிலே தனது மிக சிறந்த நடிப்பு திறனால் சீரியல் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து இழுத்து இருந்தார் நடிகை ரச்சிதா.

இதை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான இளவரசி தொடரில் மஹாலக்ஷ்மி ஐ‌பி‌எஸ் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தனது நடிப்பாற்றலின் மற்றுமொரு திறமையை வெளிக்காட்டியிருப்பார்..

இதையடுத்து விஜய் டிவியில் ஹிட் அடித்த சரவணன் மீனாட்சி தொடரின் சீசன் – 2 மற்றும் சீசன் – 3 இல் தொடர்ந்து நடித்து தனது திறமையான நடிப்பில் தொலைக்காட்சி ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தார் ரச்சிதா மஹாலக்ஷ்மி..

சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த பிறகு ரச்சிதாவிற்க்கென இணையத்தில் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது..

மேலும் ஜீ தமிழில் நாச்சியார்புரம், மீண்டும் விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் பாகம் 2 ஆகிய சீரியல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது..

இதனிடையே இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருபவர் நடிகை ரச்சித்தா போட்டோஷூட் புகை படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்வதுடன் அவ்வ பொழுது லைவ் மூலம் ரசிகர்களிடம் கலந்துரையாடியும் வருகிறார்.

ரச்சிதா மஹாலக்ஷ்மி தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான தொடர்களில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழி தொலைக்காட்சி தொடர்களிலிம் பிஸியாக வலம் வருகிறார்..

தற்போது, ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிப்பராகி வரும் இது சொல்ல மறந்த கதை தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் ரச்சித்தா மஹாலக்ஷ்மி சாதனா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கணவனை இழந்து தன்னந்தனியாக தனது குழந்தையுடன் வாழும் ஒரு தாய் தான் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், சூழ்நிலைகள், அவமானங்கள் என அனைத்தையும்,

சமாளித்து வாழ்க்கையை எதிர்கொண்டு தனக்கான நீதிக்காக போராடும் தன்னம்பிக்கை வாய்ந்த பெண்ணின் கதையை எடுத்துரைக்கிறது இது சொல்ல மறந்த கதை..

இந்நிலையில் நடிகை ரச்சிதாவின் புகைபடங்கள் இணையத்தில் படு வேகமாக பரவி ட்ரெண்ட் ஆகி வருகிறது. கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி கொண்டாடப்பட்ட யுகாதி பண்டிகையை கொண்டாடும் விதமாக,

ரச்சிதா மஹாலக்ஷ்மி ஸ்லீவ்லெஸ்ஸில் செம கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்..

தற்போது அந்த புகைபடங்கள் தான் இணையத்தில் வேகமாக பரவி ட்ரெண்டிங்கில் வலம் வருகிறது.

.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !