Last Updated on May 16, 2022 by Dinesh
புத்துயிர் பெறபோகும் மதுரவாயல் மேம்பாலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் வி.கே.சிங் முன்னிலையில் கையெளுத்து ஒப்பந்தம் ஆனது..

சென்னை துறைமுகம் மற்றும் மதுரவாயல் இடையிலான ஈரடுக்கு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம்,
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக பொறுப்பு கழகம் மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றிற்கிடையே ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கும் இன்று கையெளுத்தானது..
கடந்த திமுக ஆட்சி காலத்தில் கனரக வாகனங்கள் மதுரவாயல் வழியாக சென்னை துறைமுகத்திற்க்கு செல்வதற்காக 2010 ஆம் ஆண்டில் சுமார் 1,815 கோடி மதிப்பீட்டில் அப்போதைய பிரதமர் திரு. மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்..
மதுரவாயல் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைப்பதற்காக விறுவிறுவென பணிகள் மும்மரமாக நடைபெற்ற பணிகளால் வழியெங்கும் பாலம் அமைப்பதற்கான தூண்கள் அமைக்கப்ட்டன..
ஆனால், கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்றது.
மேம்பாலம் அமைப்பதற்காக நிறுவப்பட்டுள்ள மிக பெரிய தூண்கள் கூவத்தில் நீரோட்டம் பாதிக்கப்படும் என கூறி மேம்பால சாலை திட்டத்திற்க்கு தடை விதித்தது..
புத்துயிர் பெறபோகும் மதுரவாயல் மேம்பாலம்
இதனை தொடர்ந்து, தற்போது மாற்றியமைக்கபட்ட இத்திட்டத்தின் படி, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் இந்திய தேசிய நெடுஞ்சாலை வாயிலாக
சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான 20.566கிமீ தூரத்திற்க்கு ரூ.5855 கோடி மதிப்பில் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை அமையவுள்ளது..
இந்த இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலையில் சென்னை துறைமுகம் முதல் கோயம்பேடு வரை உள்ளூர் வாகனங்கள் பயணிக்கும் வகையிலும் 13 இடங்களில் வாகனங்கள் ஏறும் இறங்கும் சாய் தளங்கள் அமைக்கப்பட உள்ளது..
இரண்டாவது அடுக்கில் இருபுறமும் கனரக வாகனங்கள் மட்டும் இயங்க அனுமதிக்கபடும் வகையில் பாலம் கட்டபடுகிறது..
பல்வேறு காரணங்களால் நிலுவையில் இருந்த இப்பணியினை ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் தொடர் முயற்சியின் காரணமாக மீண்டும் மதுரவாயல் மேம்பாலம் புத்துயிர் பெறவுள்ளது..

இந்நிகழ்வின் போது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை இணை அமைச்சர் வி.கே. சிங், பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமை செயலாளார் வெ.இறையன்பு,
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர் கே. கோபால்,
சென்னை துறைமுக பொறுப்பு கழக தலைவர் சுனில் பாலிவால், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் முதன்மை பொறுப்பு பொது மேலாளர் பி.ஜி. கோடாஸ்கர்,
மண்டல அலுவலர் எஸ்.பி. சோமசேகர், தேசிய நெடுஞ்சாலைகள் முதன்மை பொறியாளர் பாலமுருகன்,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நேவல் ஏரியா பிளாக் ஆபிசர் கமாண்டிங்க் ரியர் அட்மிரல் புனித் சதா ,
நேவல் ஆபிசர் பொறுப்பு கமாண்டர் எஸ். ராகவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்..
ரூ.5855 கோடி மதிப்பீட்டில் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவுக்கு அமையவுள்ள இந்த உயர்மட்ட சாலைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடி வரும் 26ஆம் தேதி சென்னை வருகிறார்.