Last Updated on April 8, 2022 by Dinesh
Pbks vs gt 2022 : பஞ்சாப் கிங்ஸ் அணியை சேர்ந்த லியம் லிவிங்ஸ்டன் தற்போது புதிய சாதனை ஒன்றை இன்றைய போட்டியில் நிகழ்த்தியுள்ளார்..

ஐபிஎல் 16 வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜ்ராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி மும்பையில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த அணிகள் மோதும் போட்டி பிரபோர்ன் மைதானத்தில் மாலை 7.30pm மணிக்கு தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற குஜ்ராத் டைட்டன்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்து பந்து வீச்சை தேர்வு செய்தது..
இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய பஞ்சாப் அணியின் சார்பாக மயங்க் அகர்வால் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினார்கள்.
இவர்களில் மயங்க் அகர்வால் முதல் ஓவரிலே 5 ரன்கள் மட்டும் அடித்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்…
மயங்க் அகர்வால் விக்கெட்டுக்கு பிறகு ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்து ஆட ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினார்.
ஆட்டத்தின் 4 ஓவரில் பஞ்சாப் அணியின் மற்றொரு வீரரான ஜானி பேர்ஸ்டோவ் வெரும் 8 ரன்களில் தூர்தர்ஷ்ட வசமாக தன் ஆட்டத்தை இழந்தார்..
பின்னர், ஷிகர் தவானுடன் இணைந்து விளையாட லியம் லிவிங்ஸ்டன் களத்தில் இறங்கினார். இவர் தன் ஆட்டத்தின் துவக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தினார்
ஷிகர் தவான் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது..
இதனிடையே 30 பந்துகளுக்கு 35 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் அணியின் துவக்க ஆட்டக்கார்களில் ஒருவரான ஷிகர் தவான் கேட்ச் கொடுத்து ஆட்டத்தை விட்டு வெளியேறினார்..
இருப்பினும் லியம் லிவிங்ஸ்டன் தன் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து ஆடியதில் அவர் மொத்தம் 27 பந்துகளில் 7 ஃபோர், 4 சிக்சர்கள் என விளாசி தள்ளியதில் லியம் லிவிங்ஸ்டன் அதிவேகமாக அரை சதத்தை எட்டினார்..
லியம் லிவிங்க்ஸ்டன் தன்னுடைய ஆட்டத்தை இழக்கும் போது 27 பந்துகளில் மொத்தம் 67 ரன்களை எடுத்து இருந்தார். இந்த போட்டியில் லியம் லிவிங்ஸ்டன் 21 பந்துகளில் 50 ரன்களை அதிவேகமாக எடுத்ததில்,
ஐபிஎல் போட்டிகளில் அதிவேகமாக அரை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை இப்போட்டியில் லியம் லிவிங்ஸ்டன் பெற்றுள்ளார்..
ஐபிஎல் வரலாற்றிலே அதிவேகமாக அரை சதம் அடித்த முதல் வீரர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த பட் கம்மின்ஸ் என்பது குறிபிடத்தக்கது..
இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 189 ரன்களை எடுத்து உள்ளது. 190 ரன்கள் இலக்காக கொண்டு தற்போது குஜ்ராத் டைட்டன்ஸ் அணி விளையாடி வருகிறது.