வாழ்த்து மழையில் நிக்கி கல்ராணி ஆதி
Last Updated on May 19, 2022 by Dinesh
நடிகை நிக்கி கல்ராணி ஆதி திருமணத்திற்க்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்..

கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் சாமி இயக்கத்தில் வெளிவந்த மிருகம் திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் ஆதி. இதை தொட்ர்ந்து நடிகர் ஆதி ஈரம், அரவாண், கோச்சடையான், யு டர்ன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்..
குறிப்பாக, இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த ஈரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்..
நடிகர் ஆதி தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நின்னு கோரி, ரங்கஸ்தலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் ஆதி நடிகை நிக்கி கால்ராணியை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்..
கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் சாம் ஆண்டோன் இயக்கத்தில் வெளிவந்த டார்லிங் திரைபடத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட திரைப்டங்களில் பிஸியாக நடித்து வருகிறார்..
நடிகை நிக்கி கல்ராணி மற்றும் நடிகர் ஆதியும் காதலிப்பதாகவும் விரைவில் இவர்கள் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் முன்பே செய்திகள் வெளிவந்தன. இதனையொட்டி கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி நிக்கி கல்ராணிக்கும் ஆதிக்கும் நிச்சயத்தார்த்தம் நடந்தது..
இதற்கான புகைப்படங்களை இருவரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு திருமணத்தை உறுதி செய்தனர். இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் திருமணம் நடைபெற்றுள்ளது..
இத்திருமணத்தில் இரு வீட்டார்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கிய திரைபிரபலங்கள் ஆகியோர் கலந்து கொண்டு ஆதி நிக்கி கல்ராணி ஜோடியை வாழ்த்தியுள்ளனர்..
தற்போது அதற்கான புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மேலும் ரசியகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.