Last Updated on October 4, 2021 by Dinesh
amazon great indian festival 2021- கிற்கான சலுகை விலையில் பொருட்கள் விற்பனை செய்யும் திருவிழா அமேசானில் தொடங்கியது..

ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்யும் பிரபல நிறுவனமான அமேசான் ஒவ்வொரு ஃபெஸ்டிவல் தினங்களை முன்னிட்டு பொருட்களை குறைந்த விலை சலுகைகளுடன் விற்பனை செய்வது வழக்கம்.
அந்த வகையில் தற்போது அமேசான் இந்தியன் க்ரேட் ஃபெஸ்டிவல் 2021-ஐ தீபாவளியை முன்னிட்டு நேற்று அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கியது.
amazon great indian festival 2021
இதில் மொபைல்கள் , கம்பியூட்டர்கள்,லேப்டாப்கள், வீட்டு உபயோக பொருட்கள் என பல பொருட்களின் விலைகள் குறைந்த விலையில் விற்பனை செய்ய போவதாக அறிவித்துள்ளது.
மேலும் இதன் கூடவே பல அதிரடியான சலுகைகளை வழங்கியுள்ளது அமேசான். தற்போது சலுகைகள் வழங்கபட்டுள்ள பொருட்களின் முழு விவரத்தை காண்போம்..
பிளாக்பஸ்டர் டீல்ஸ் ஆக எலெக்ட்ரானிக் சாதன பொருட்களான லேப்டாப், ஹெட்போன் மற்றும் ஸ்பீக்கர், வாட்ச், கேமரா போன்ற பொருட்களுக்கு 70 சதவீதம் வரையிலான சலுகை மற்றும் இதனுடன் 24 மாதம் வரையிலான நோ காஸ்ட் இஎம்ஐ வசதியும் அறிவிக்கபட்டுள்ளது.
வீட்டை அலங்கரிக்கும் பொருட்களான டிவி, நியூ மாடல் டிவி, வாஷிங்மெசின், குளிர் சாதன பெட்டி போன்ற பொருட்களுக்கு 65 சதவீதம் சலுகைகள் தரப்பட்டுள்ளன. இதில் ரூ 12,000 வரையில் கூப்பன்களை பயன்படுத்தி கொள்ளலாம்.
அமேசானில் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்வது மொபைல் போன்களுக்கு கொடுக்கபடும் விலைகள் மற்றும் அதன் சலுகைகள் தான். தற்போது அமேசானில் மொபைல்களுக்கான சலுகைகளை அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் டாப் ஸ்மார்ட் போன்களான (amazon great indian festival 2021 mobile offers ) ஒன்பிளஸ், சியோமி, சாம்சங், ஆப்பிள் போன்ற மொபைல்களுக்கு 60 சதவீதம் வரையிலான சலுகைகளை அறிவித்துள்ளது. மேலும் இதனுடன் 7,000 வரை பங் டிஸ்கவுண்ட் செய்யபடும் என தெரிவித்துள்ளது. இது எச்டிஎஃப்சி கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும்.
மேலும், ஆண்களுக்கு தேவையான துணிகள், காலணிகள், பேக் மற்றும் லக்கேஜ் மற்றும் வாட்ச்கள் மீதான பொருட்களுக்கு 80 சதவீதம் வரை சலுகை அறிவிக்கபட்டுள்ளது.
வைரலாகும் அண்ணாத்த படத்தின் மோஷன்…
வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் கிச்சனுக்கு தேவையான பொருட்களின் மீது 70 சதவீதம் வரை அளிக்கபட்டுள்ளது.
இதனுடன் எக்ஸ்ட்ரா அறிவிப்பாக ரூ 400 வரை கேஷ்பேக் மற்றும் இலவச டெலிவரி என அறிவித்துள்ளது.
வீட்டிற்க்கு தேவைப்படும் தினசரி பொருட்களுக்கு 65 சதவீதம் வரையிலும், வீட்டின் தேவைக்கு தேவைப்படும் மற்ற இதர பொருட்களின் மீது 65 சதவீதம் சலுகை மற்றும் ரூ 400 வரை கேஷ்பேக் வசதியை தெரிவித்துள்ளது..
புக்ஸ், டாய்ஸ் மற்றும் வீட்டின் வேலைகளுக்கு தேவைப்படும் பொருட்களுக்கு 70 சதவீதம் வரை சலுகை தரப்பட்டுள்ளன.
அமேசானில் கிரெடிட் கார்ட் அல்லது டெபிட்கார்ட்களை பயன்படுத்தி பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு சிறப்பான சலுகையை அறிவித்துள்ளது..
அதாவது, (amazon great indian festival 2021 bank offers ) எச்டிஎஃப்சி கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட்களை பயன்படுத்தி பொருட்களை வாங்குவோர்களுக்கு 10 சதவீதம் இன்ஸ்டண்ட் டிஸ்கவுண்ட் அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.
எச்டிஎஃப்சி கிரெடி கார்ட் மற்றும் டெபிட் கார்ட்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகை ஆனது வரும் அக்டோபர் 7 ஆம் தேதி வரையில் தான் செயல்படும்.