Last Updated on October 18, 2022 by Dinesh
ஓடிசா மாநிலத்தில் ரூ.1500 கடனை திருப்பி செலுத்த கால தாமதம் ஆனதால் கடன் கொடுத்தவர் செய்த இரக்கமற்ற செயலால் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்..
பணம் என்று வந்துவிட்டால் பழக்க வழக்கம், சொந்த பந்தம், நண்பன் என அனைத்தையும் மறந்துவிட்டு பணத்தில் மட்டும் மிக கராராக இருப்பவர்களை நம்மில் பலர் பார்த்திருப்போம் ஏன் அவர்களிடம் பழகியும் இருப்போம்..
ஒருவருக்கு அவரசர பணத் தேவை ஏற்படும் பொழுது அவர் கையிருப்பில் போதுமான அளவு பணம் இல்லாதபட்சத்தில் தனக்கு தெரிந்த இன்னொருவரிடம் பணம் கடனாக கேட்டு பெற்று
தன் அவசர தேவையை பூர்த்தி செய்து கொள்வார்கள் இது எல்லோர் இடத்திலும் இருக்க கூடிய இயல்பான செயல் தான்..
அவ்வாறு கடன் கேட்பவர் முதலில் தன் நண்பர்கள், உறவினர்கள், தன்னுடன் நெருங்கி பழகும் நபர்களிடம் தான் கடனை கேட்பார்கள்..
இவர்களில் நெருங்கி பழகியவர்கள், உறவினர்கள் கூட சில சமயம் கடன் கேட்டால் கொடுப்பதில்லை ஆனால் அவரசர நிலைக்கு பணம் கொடுத்து உதவுவது பலருக்கும் நண்பனாக தான் இருக்கும்..
ஆனால், இந்த கொடுக்கல் வாங்களில் உறவினர்களானலும் சரி, நண்பர்களானலும் சரி சில சமயம் கைகலப்பு, அடிதடி, வழக்கு என கடனை திருப்பி வாங்க பல பிரச்சனைகள் கூட நடந்திருக்கும்.
1500 கடனுக்காக மனித தன்மையற்ற செயல்
தற்போது இதை போன்று ஓடிசாவில் கொடுக்கல் வாங்களில் தாமதம் ஆனதால் கடன் கொடுத்தவர் சற்று விவகாரமான செயலில் ஈடுபட்டுள்ளார்..
ஓடிசாவில் கட்டக் பகுதியில் வசிக்கும் ஜகன்நாத் பெஹரா என்பவர் தனக்கு தெரிந்த ஒருவரிடம் ரூ.1500-ஐ கடனாக பெற்றுள்ளார்.
அப்படி வாங்கிய கடனை சொன்ன நேரத்திற்க்குள் ஜகன்நாத்தால் திருப்பி கொடுக்க முடியாமல் போயிருக்கிறது.
இதனால் கடுப்பான கடன் கொடுத்தவர் தன்னுடைய இரு சக்கர வாகனமான ஸ்கூட்டியின் பின்பக்கத்தில் 12மீட்டர் நீளமுள்ள கையீற்றின் ஒரு முனையை வாகனத்தின் பின்பக்கத்தில் கட்டிவிட்டு
மறுமுனையை கடன் வாங்கிய ஜகன்நாத்தின் கையில் கட்டி ஓடிசாவின் ஷெல்டெர்சக் – லிருந்து மிஷன் ரோடு வரை சுமார் 2கிலோமீட்டர் வரை அந்த இளைஞரை இழுத்து சென்றுள்ளார் கடன் கொடுத்தவர்..
இந்த மனித தன்மை அற்ற செயலை பார்த்த அப்பகுதி மக்கள் ஸ்கூட்டியை மறித்து அந்த இளைஞரை மீட்டு விவரத்தை கேட்டனர். அப்போது கடன் வாங்கிய ஜகன்நாத் கூறுகையில்
கடந்த மாதம் தன்னுடைய தாத்தா இறந்ததிற்க்கு இறுதி சடங்கு செய்வதற்காக ஒரு மாதத்தில் திருப்பி தருவதாக கூறி ரூ.1500 கடனாக வாங்கியுள்ளார். ஜகன்நாத் சொன்னபடி கடனை திருப்பி தராததால் இவ்வாறான கீழ் தரமான செயலை செய்துள்ளனர்..
சமூக வலைத்தளங்களில் இது சம்பந்தமான வீடியோ வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சியடையை செய்தது மட்டுமின்றி கண்டனங்களும் எழுந்தன.
இந்த வீடியோவை பார்த்த பலரும் இவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தும் வந்தனர்..
இதனை தொடர்ந்து ஓடிசாவின் கட்டக் பகுதி காவல் துறையினர் கடனை திருப்பி தராததால் வாகனத்தில்,
கையிறு கட்டி இழுத்து சென்ற நபரையும் அவரது நண்பரையும் கைது செய்து இதற்காக அவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்..
இந்த சம்பவத்தை கண்காணிக்க தவறிய போக்குவரத்து துறை காவல் துறையினரை கட்டக் காவல் துறையினர் கண்டித்துள்ளனர்.