Cinema NewsKollywood

தனது வருங்கால மனைவியை அறிமுகம் செய்த ஹரீஷ் கல்யாண்

Last Updated on October 5, 2022 by Dinesh

நடிகர் ஹரீஷ் கல்யாண் தான் திருமணம் செய்து கொள்ள போகும் வருங்கால மனைவியை அறிமுகம் செய்துள்ளார்..

தனது வருங்கால மனைவியை அறிமுகம் செய்த ஹரீஷ் கல்யாண்
harish kalyan

கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் சாமி இயக்கத்தில் வெளிவந்த சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் ஹரீஷ் கல்யாண். இந்த படத்தில் தான் நடிகை அமலா பாலும் முதன் முதலில் நடிகையாக அறிமுகமானார்..

சிந்து சமவெளி படத்திற்க்கு பிறகு அரிது அரிது, சட்டப்படி குற்றம், வில் அம்பு, பொறியாளன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த ஹரீஷ் கல்யாண்.

கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் சீசன் 1-இல் வைல்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்டார்..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறிது நாட்களே இருந்தாலும் பலரது கவனத்தையும் ஈர்த்து குறுகிய காலத்தில் பிரபலமும் ஆனார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 1-இல் இரண்டாவது ரன்னர் அப்பாவாகவும் தேர்வு செய்யபட்டார்..

இதையடுத்து ஹரீஷ் கல்யாண் தமிழில் அடுத்தடுத்து படங்களில் நடிக்க தொடங்கினார் குறிப்பாக,

இவர் நடிப்பில் வெளிவந்த pyaar prema kaadhal, ispade rajavum idhaya raniyum, oh manapenne, kasada thapara உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது..

தற்போது ஹரீஷ் கல்யாண் நூறு கோடி வானவில் படத்தில் நடித்துள்ளார் இத்திரைபடம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில் நடிகர் ஹரீஷ் கல்யாண் தனது திருமண அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்..

இது தொடர்பாக நடிகர் ஹரீஷ் கல்யாண் தனது அறிக்கையில் தெரிவித்து இருப்பது..

மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தின் தொடக்கத்தை துவங்க உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன்.

எனது பெற்றோர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், பத்திரிக்கை நண்பர்கள், ஊடகங்கள், எனது அன்பான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரது ஆசியுடன் நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்..

எங்களை நாங்களே புதுபித்து கொள்ளும் இந்த புதிய வாழ்க்கை பயணத்தை துவங்கும் நேரத்தில் இப்போதும்,

எப்போதும் உங்கள் அனைவரது இரட்டிப்பு ஆசீர்வாதங்களையும், அன்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என ஹரீஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !