NewsTv

Bigg boss Tamil 5 இவர்கள் தான் போட்டியாளர்களா?

Last Updated on September 4, 2021 by Dinesh

Bigg boss Tamil 5 – இல் கலந்து கொள்ளும் போட்டியாளராகள் இவர்கள் தான் என்று பெயர் பட்டியல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Bigg boss Tamil 5 இவர்கள் தான் போட்டியாளர்களா?
Kamal Hassan

உண்மையில் அந்த புகைபடத்தில் இருக்கும் பிரபலங்கள் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறார்களா ? அந்த புகைபடத்தில் இருக்கும் பிரபலங்கள் யார் என்பதினை பற்றி இதில் பார்ப்போம்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ். .உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த 2017 ஆம் ஆண்டு துவக்கபட்டது.

இது வரையில் பிக்பாஸ் தமிழ் நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்து வந்துள்ளது. பிக்பாஸ் தமிழின் ஒவ்வொரு சீசனும் ரசிகர்ளிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது..

அதை போன்று பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இணையத்தில் உண்டு. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை ரசிகர்கள் அவர்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களுக்கு ஆன்லைன் மற்றும் எஸ்‌எம்‌எஸ் மூலமாக

வாக்குகளை செலுத்தி அவர்களின் ஆதரவை பிக்பாஸில் இருக்கும் போட்டியாளர்களுக்கு தெரிவிக்க முடியும்.

ஆதலால் இந்த நிகழ்ச்சி அனைத்து விதமான ரசிகர்களையும் சென்று சேர்ந்துள்ளது. மேலும் நிகழ்ச்சியின் வார கடைசி இரண்டு நாட்கள் உலக நாயகன் கமல் ஹாசன்

போட்டியாளர்களுடன் நேரடியாக உரையாடும் போது ரசிகர்கள் தான் விரும்பும் போட்டியாளரிடம் கேள்வி கேட்கும் வசதியும் இந்த நிகழ்ச்சியில் செய்து தரப்பட்டுள்ளது..

கடந்த சீசன் கொரோனா தொற்று பரவல் காரணமாக முதன் முறையாக பார்வையாளர்கள் இன்றி பிக்பாஸ் போட்டி நடைபெற்றது.

இந்த ஆண்டும் கடந்த ஆண்டை போன்று நடைபெருமா ? அல்லது பார்வையாளர்கள் அனுமதிக்கபடுவார்களா என்பது போட்டிகள் நடைபெறும் பொழுது தான் தெரிய வரும்.

Bigg boss Tamil 5

ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக எதிபார்த்த பிக்பாஸ் தமிழ் 5 போட்டிகள் முந்தைய சீசனை போன்றே இந்த சீசனும் அக்டோபர் முதல் வாரத்தில் ஆரம்பிக்கலாம் என்று தெரிகிறது.

கொரோனா பெருந்தோற்று காரணமாக வழக்கம் போல் ஜூன் மாதத்தில் தொடங்காமல் சற்று தாமதமாக அக்டோபரில் தொடங்க உள்ளது.

இதனை அடுத்து யாரும் எதிர்பாரா விதமாக பிக்பாஸ் தமிழ் 5 -இன் முதல் பிரோமோ கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரபூர்வமாக வெளியானது. அந்த பிரோமோவில் உலக நாயகன் கமல் ஹாசன் ஆரம்பிக்கலாமா என்ற வசனத்துடன் 20 நொடிகள் அடங்கிய பிரோமோவாக வெளிவந்தது..

இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் தமிழ் 5 -இன் இரண்டாவது பிரோமோ ஒன்று வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.இதை தொடர்ந்து பிக்பாஸ் ரசிகர்கள் இடையே இந்த சீசனில் பங்கு பெரும். போட்டியாளர்கள் யார், யார் என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில் இணையத்தில் இவர்கள் தான் பிக்பாஸ் தமிழ் 5 -இல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் என ஒரு புக்பைபடம் பரவி வருகிறது.

அந்த புகை படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், மைனா, செய்தி வாசிப்பாளர் கண்மணி, நடிகர் எம் எஸ் பாஸ்கர், சர்ப்பட்டா பரம்பரை நடிகர் ஜான் விஜய், நடிகை ஷகிலாவின் மகள் மிலா,

லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கூக் வித் கோமாளி பாபா பாஸ்கர் மற்றும் கனி திரு, இணையம் புகழ் ஜி‌பி முத்து ஆகியோர் பெயர் பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகிறது..

இதில் யார் உண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறார்கள் என்பது பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்…

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !