Last Updated on May 21, 2022 by Dinesh
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கபட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்..

பெட்ரோல் மீதுள்ள கலால் வரியில் ரூ.8ம் டீசல் மீதுள்ள கலால் வரியில் ரூ.6ம் குறைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாம் அலை தாக்கத்திற்க்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசலின் விலை ஏறுமுகத்திலே காணப்பட்டு வந்தது. சர்வேதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு போன்றவற்றின் விலைகள் நிர்ணயம் செய்யபடுகின்றன..
இதற்கிடையில் கடந்த 2 மாதத்திற்க்கும் மேலாக ரஷ்யா – உக்ரைன் நாட்டுக்கும் இடையே நடைபெற்று வரும் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் கடந்த காலங்களில் இல்லாத அளவு பெட்ரோல் மற்றும் டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் உயர்ந்து வருகிறது..
இதன் தொடர்ச்சியாக, டீசலின் விலை. ரூ.100-ஐ கடந்து வரலாறு காணாத ஏற்றத்தை சந்தித்துள்ளது. பெட்ரோல் விளையும் ரூ.110-ஐ தாண்டியுள்ளது.
இதனுடன் சமையல் எரிவாயு விலையும் ரூ.1000 -த்தை கடந்ததால் நடுத்தர மற்றும் கீழ் நிலை மக்களின் வாழ்வாதாரம் மிகவும் கடுமையாக பாதிக்கபட்டுள்ளது..
தொடர்ந்து, 45 நாட்களாக பெட்ரோல் ரூ.110 மற்றும் டீசலின் ரூ.100 என்ற விலையில் விற்பனை செய்யபட்டு வருகின்றது. இதனால் மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி வந்த நிலையில் தற்போதி மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்துள்ளது..
அதாவது, இந்த வரி குறைப்பால் தற்போது இருக்கும் பெட்ரோல் விலை ரூ.110.85 இதில் ரூ. 9.50 கலால் வரி குறைக்கபடுகிறது. தற்போதுள்ள டீசலின் விலை ரூ. 100.94 இதன் மீது ரூ 7.00 கலால் வரி குறைகிறது.
இந்த வரி குறைப்பின் மூலம் அரசுக்கு 1 லட்சம் கோடி வருவாய் இழப்பு நேரிடும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்..
தற்போது உள்ள பெட்ரோல் விலை ரூ.110.85 வரி குறைப்பிற்க்கு பின் ரூ.101.35
டீசலின் தற்போதைய விலை ரூ.100.94. விலை வரி குறைத்தபின் ரூ. 93.94 என குறையும் என எதிர்பார்க்கபடுகிறது.