Last Updated on October 18, 2022 by Dinesh
இன்று உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத்த்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இதுவரையில் 7 பேர் உயிர் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாக் மாவட்டத்தில் இன்று காலை சுமார் 11.40 மணி அளவில் கேதர்நாத் கோவிலில் இருந்து,
குப்தகாசியை நோக்கி யாத்திரிகர்களை ஏற்றி கொண்டு தனியார் நிறுவன ஹெலிகாப்டர் ஒன்று கருட் சுட்டி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஹெலிகாப்டரில் திடீரென தீப்பிடிக்க தொடங்கியுள்ளது..
ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருக்கையில் திடீரென தீப்பிடித்து கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரை ஒட்டி சென்ற பைலட் உள்பட 7 பேர் உயிர் இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
இந்த விபத்து குறித்து தகவலிருந்து உடனே சம்பவ இடத்திற்க்கு வந்த மீட்பு குழுவினர் விபத்தில் உயிர் இழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி மீட்டு வருகின்றனர்..
கேதர்நாத் விபத்தில் இதுவரையில் 7 பேர் உயிர் இழந்ததாக சொல்லபடும் நிலையில், இறந்தவர்களில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும்,
அவர்கள் சென்னையை சேர்ந்த சுஜாதா (56), கலா (60), பிரேம்குமார் (63) என தற்போது தெரிய வந்துள்ளது..
மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டு விபத்து நடந்திருக்கிறதா அல்லது வேறு எதேனும் காரணமா என விமான போக்குவரத்து துறை உத்தரவின் பேரில் தற்போது இந்த விபத்து குறித்து விசாரணை செய்ய உத்தரவிடபட்டுள்ளது.