JR 30 : ஜெயம் ரவியுடன் ஜோடி சேரும் ப்ரியங்கா மோகன்
Last Updated on August 5, 2022 by Dinesh
ஜெயம் ரவி இயக்குனர் எம். ராஜேஷ் புதியதாக இணையும் படத்தின் பூஜை இன்று சென்னையில் கோலாகலமாக தொடங்கியது..

சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ராஜேஷ் நடிகர் விஷால், சிவகார்த்திகேயன், ஆர்யா, கார்த்தி என தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களை இயக்கி உள்ளார்..
அந்த வரிசையில் கடைசியாக ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், அம்ரிதா ஐயர், ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான வணக்கம் டா மாப்ள திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு திரைக்கு வராமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது..
இந்த திரைபடத்திற்க்கு பிறகு இயக்குனர் ராஜேஷ் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்புகள் எதும் வெளிவராத இருந்த நிலையில் தற்போது ஒரு சூப்பர் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது..
ஜெயம் ரவி நடிக்கும் தனது 30-வது திரைபடத்தை இயக்குனர் எம் ராஜேஷ் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் டான், டாக்டர், எதற்கும் துணிந்தவன் படங்களின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ப்ரியங்கா மோகன் முக்கிய கதாபாதிராத்தில் நடிக்கிறார்..
மேலும் jr 30 படத்தில் நடிகர் விடிவி கணேஷ் மற்றும் நடிகர் நட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்..
screenscene நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்க்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார் ஒளிப்பதிவாளராக விவேக் ஆனந்த் சந்தோஷம் பணியாற்றுகிறார்..
சென்னையில் இன்று காலை நடைபெற்ற jr 30 படத்தின் பூஜையில் இயக்குனர் ராஜேஷ் மற்றும் நடிகர் ஜெயம் ரவி, நடிகை ப்ரியங்கா மோகன், ஒளிபதிவாளர் விவேக் ஆனந்த் சந்தோஷம் உள்ளிட்டோர் பட பூஜையில் கலந்து கொண்டனர்.