Last Updated on July 30, 2021 by Dinesh
தமிழகத்தில் இன்று உச்சத்தை தொட்ட கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கபட்டுள்ள நிலையில்
இன்று ஒரே நாளில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 4,526 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது கொரோனா வைரஸ். மேலும் இன்று கொரோனா-வால் 67-பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கொரோனா தொற்று ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுவதை தடுப்பதற்க்கு மத்திய அரசு பல்வேறு கட்டுபாட்டு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இதை தொடர்ந்து தமிழக அரசும் கொரோனா தொற்று பரவலை கட்டுபடுத்த பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் தனி மனித கட்டுபாட்டு முறைகளை அறிவித்துள்ளது..
அதன் அடிபடையில் தமிழக மாநிலங்களுக்கு மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு போக்குவரத்து தடை, விமானம், ரயில், பேருந்து சேவை போன்றவைகள் நிறுத்தி வைக்கபட்டுள்ளனர்.
பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூட தடை, மக்கள் தேவையின்றி வெளியில் சுத்துவதை தவிர்த்தல் போன்ற விதிமுறைகளை தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று உச்சத்தை தொட்ட கொரோனா?
இதை தொடர்ந்து சென்னையில் இன்று 1078-பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாகவே கொரோனா பாதிப்பு சென்னையில் வெகுவாக குறைந்து காணபடுகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதில் சென்னையில் தான் முதலில் அதிகமானோர் தொற்றின் பாதிப்புக்குள்ளானர்கள், மேலும் கொரோனா தொற்றின் வேகம் சென்னையில் அதிகளவு பரவ தொடங்கியது.
ஆனால், தற்போது ஒரு வாரமாக சென்னையில் கொரோனா தொற்றின் வேகம் குறைந்து காணபடுகிறது. இதன் காரணமாக சென்னையில் விதிக்கபட்டுள்ள கட்டுபாட்டு விதிமுறைகளை சற்று தளர்த்தியுள்ளது தமிழக அரசு.
மேலும் சென்னையில் கொரோனா -வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,858-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 18-பேர் இன்று சென்னையில் உயிரிழப்பு. இன்று சென்னையில் பாதிப்பு விகிதத்தை விட குனமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
சென்னையில் கொரோனா தொற்றுக்கு பாதிப்பு அடைபவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக சற்று குறைந்து காணபட்டாலும் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் குறையாமல் காணபடுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இது வரை இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 4,526 பேர் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளனர்.. இதனால் இன்று தொற்றினால் உயிர்ழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 18 ஆக காணபடுகிறது.
கொரோனாவால் பாதிப்பு அடைபவர்களின் எண்ணிக்கையை விட அதிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணபடுவது சற்று நிம்மதியை கொடுத்து இருக்கிறது.
தமிழகத்தில் இன்று உச்சத்தை தொட்ட கொரோனா 4,526-பேர் பாதிக்கபட்ட நிலையில் 4,743-பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் தமிழகத்தின் இன்று மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 67-ஆக உள்ளது.
இன்றைய இறப்பு எண்ணிக்கையில் சென்னையில் அதிகபட்சமாக 18-பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனா-வால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 1,47,324-ஆக உயர்ந்துள்ளது இதுவரை தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கை 2,099-ஆக அதிகரித்துள்ளது.