யுட்யூபில் கலக்கி வரும் “Adipoli” அஷ்வின் பாடல்
Last Updated on August 21, 2021 by Dinesh
யுட்யூபில் கலக்கி வரும் “Adipoli” அஷ்வின் பாடல் நேற்றைய தினம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி முதல் பாகம் மிக பெரிய வெற்றி பெற்று மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து மீண்டும் குக் வித் கோமாளி பாகம் 2 தொடங்கபட்டது.
இது முதல் பாகத்தை போன்றே குக் வித் கோமாளி 2 ஆம் பாகமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெரிய பெற்று நடந்து முடிந்தது. அவ்வாறு நடந்து நடந்து முடிந்து.
குக் வித் கோமாளி 2 ஆம் பாகத்தில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான அஷ்வின் குமார் இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.
சமூக வலைத்தளங்களில் அஷ்வின் குமாருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்க்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி தொடரில் ஹீரோவாக நடித்து இருப்பார்..
குக் வித் கோமாளி 2 ஆம் பாகம் முடிவடைந்த நிலையில் சமீபத்தில் தான் அதன் வெற்றி கொண்ட நிகழ்ச்சிகள் கோலாகலகமாக நடைபெற்றுது.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அஷ்வின் குமார் மற்றும் குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் இணைந்து என்ன சொல்ல போகிறாய் என்கிற திரைபடத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்று படபிடிப்பு வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
மேலும் அஷ்வின் தனது மற்றுமொரு படமாக மியூட் கியூட் என்கிற படத்தில் நடிக்க உள்ளார். இப்படம் தெலுங்கில் எடுக்கப்பட உள்ளது.
தனது பிசியான நேரத்தில் அவ்வ போது சமூக வலைதளத்தில் ரசிகர்களிடம் உரையாடியும் வருகிறார்.
அதில் தனது பணி குறித்தும் படத்தில் நடிக்கும் அனுபவம் குறித்தும் தனது ரசிகர்களுக்கு பகிர்ந்து வருகிறார்.
இதற்கிடையில் அஷ்வின் குமார் மியூசிக் ஆல்பங்களிலும் நடித்து வருகிறார். அப்படியாக அவர் நடித்து வந்த குட்டி பட்டாஸ் (Kutty pattas ) மியூசிக் ஆல்பம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அப்பாடல் இதுவரை 113 மில்லியன் பாரவையாளர்களை கடந்து யுட்யூபில் சாதனை படைத்து வருகிறது.. இந்த 1.5 மில்லியன் லைக்களை இது வரை குவித்துள்ளது..
யுட்யூபில் கலக்கி வரும் “Adipoli”
இதனை தொடர்ந்து அஷ்வினின் மற்றுமொரு .பாடலான அடிபொலி (adipoli song ) மியூசிக் ஆல்பம் நேற்று மாலை வெளியானது.
பாடல் வெளியான சிறிது நேரத்திலே லட்சம் பார்வையாளர்களை கடந்தது.
இந்த பாடல் வெளியான 24 மணி நேரத்தில் 2.3 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த் ஆல்பத்தில் அஷ்வின் குமார், குஷீ ஆகியோர் நடித்துள்ளனர்.
பாடலை குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி கிருஷ்ணகுமார் மற்றும் பிரபல மலையாள பாடகர் வினீத் ஸ்ரீநிவாசன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்..
மலையாள பாடகர் வினீத் ஸ்ரீநிவாசன் ஏற்கனவே மலையாளத்தில் ஜிமிக்கி கம்மல் உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடியவர் ஆவார்..
ஒனம் பண்டிகையை முன்னிட்டு வெளியிடபட்ட அடிபொலி பாடலை நேற்று மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் இந்த பாடலை ட்வீட்டரில் வெளியீட்டு அடிபொலி ஆல்பம் குழுவிற்க்கு ஒனம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்..
இந்த பாடலை இயக்கிய சித்தூ குமார் பாடலுக்கு இசையும் அவரே இசையமைத்துள்ளார் பாடலை விக்னேஷ் ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார்.