இறுதிகட்ட படப்பிடிப்பை நெருங்கும் அயலான்…
Last Updated on June 30, 2021 by Dinesh
இறுதிகட்ட படப்பிடிப்பை நெருங்கும் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் திரைப்படம்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ உள்ளிட்ட திரைபடங்கள் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து.
அதனை தொடர்ந்து அவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘டாக்டர்’ இத்திரைபடத்தின் படபிடிப்புகளும் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.
டாக்டர்’ படத்தை .நயன்தாரா நடிப்பில் உருவான கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படபிடிப்புகள் ஏற்கனவே நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பை நிறுத்தி வைத்து இருந்தது படக்குழு.
தற்போது ஊரடங்கில் தளர்வுகளை கொண்டு வந்த தமிழக அரசு திரைதுறையின் படபிடிப்புகளுக்கு கட்டுபாடுகளுடன் கூடிய புதிய தளர்வுகளை அறிவித்தது. அதன்படி டாக்டர் படத்தின் படபிடிப்பு வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தீபாவளியன்று டாக்டர் படத்தின் இரண்டு புதிய போஸ்டர்களை வெளியீட்டு நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லியும் டாக்டர் படம் வருகிற 2021 சம்மருக்கு வெளியவதாக படக்குழு அறிவித்தது.
இந்த அறிவிப்பை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் டாக்டர் பட போஸ்டர்களை பகிர்ந்து தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து #doctor என்ற ஹஸ்டாக் ட்ரெண்ட் செய்து வந்தனர்.
டாக்டர் திரைபடத்தில் இடம் பெற்றுள்ள செல்லம்மா(#chellamasong) பாடலை சிவகார்த்திகேயனே எழுதி இருக்கும் பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். அருண்விஜய் படத்தின் சினம் போஸ்டர் வெளியாகியுள்ளது…
அப்பாடல். ரசிகர்களுடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது மேலும் இணையத்தில் 7 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கியுள்ளது 9.6லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது.
இத்திரைபடத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார் மேலும் படத்தில் அவந்திக்கா மோகன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
வினய் வில்லனாக நடித்து இருக்கிறார் இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் அனிருத் ரவிசந்திரன் இசையமைக்கிறார்.
இறுதிகட்ட படப்பிடிப்பை நெருங்கும் அயலான்…
‘அயலான்’ திரைப்படம் டாக்டர் திரைபடத்திற்கு முன்பே 2018 ஆம் ஆண்டு தொடங்கபட்டது. இப்படத்தின் பஸ்ட் லூக் போஸ்டர் கடந்த பிப்ரவரி மாதம் சிவகார்த்திகேயன் பிறந்தநாளுக்கு வெளியிட்டது படக்குழு.
அதன் பிறகு நீண்ட நாட்களாக இப்படத்தின் அப்டேட்கள் ஏதும் வெளிவராத நிலையில் தற்போது இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டது படக்குழு.
அந்த அப்டேட்டில் குறிப்பிட்டு இருப்பதாவது சிறிய இடைவெளிக்கு பிறகு அயலானின் இறுதிகட்ட அட்டவணை தொடங்கியதில் மகிழ்ச்சி எனவும் விரைவில் படத்தின் பஸ்ட் சிங்கிள் வெளியாகும் எனவும் படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டது.
இந்த அறிவிப்பை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் #ayalaan என்ற ஹஸ்டாக் உருவாக்கி இணையத்தில் அயலான் போஸ்டர்களை வைரலாக்கி வருகின்றனர்..
இறுதிகட்ட படப்பிடிப்பை நெருங்கும் அயலான் திரைப்படம் அறிவியல் சார்ந்த கதைகளம் கொண்ட திரைபடமாக உருவாகிறது. இப்படத்தில் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார் மேலும் யோகி பாபு கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தை நேற்று இன்று நாளை திரைபடத்தை இயக்கிய ஆர். ரவிகுமார் இயக்குகிறார் ஏ.ஆர். ரகுமான் நடிகர் சிவகார்த்திகேயன் படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கிறார் கே. ஜே.ஆர். ஸ்டுடியோஸ் படத்தை தயாரிக்கிறார்.