Rolex-க்கு Rolex-ஐ பரிசளித்த உலகநாயகன் கமல் ஹாசன்
Last Updated on June 8, 2022 by Dinesh
Rolex-க்கு Rolex-ஐ பரிசளித்தார் உலகநாயகன் கமல் ஹாசன் தற்போது அந்த புகைபடங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது..

கடந்த ஜூன் 3 ஆம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி,பகஹத் பாசில், நரேன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் இந்தியா மற்றும் உலக அளவில் மாபெரும் வசூல் சாதனையை பெற்று வருகிறது..
விக்ரம் திரைபடத்தின் கதாநாயகனான கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் vikram படத்தினை தயாரித்தது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் இசையமைத்திருந்தார்..
மேலும், படத்தில் எடிட்டராக பிலோமின் ராஜ், ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். விக்ரம் படத்தின் தமிழக திரையரங்கு உரிமத்தை உதய்நிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது..
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான விக்ரம் திரைப்படம் கமல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
விக்ரம் திரைப்படம் உலக அளவில் சுமார் 200 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்து வரும் வேலையில் இந்த வெற்றியை கொண்டாடும்
விதமாக vikram படக்குழுவினருக்கு பரிசுகளை அளித்து வருகிறார் படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான கமல் ஹாசன்..
அந்த வகையில் நேற்று விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜிக்கு lexus வகை காரை பரிசாக அளித்தார். அது மட்டுமின்றி படத்தில் உதவி இயக்குனர்களாக பணியாற்றிய 13 பேருக்கு Apache RTR பைக்குகளை பரிசளித்தார்..
இந்த வரிசையில், விக்ரம் படத்தில் கடைசி 3 நிமிடங்களில் rolex கதாபாத்திரத்தில் தோன்றி திரை அரங்குகளை தெறிக்கவிட்ட நடிகர் சூர்யாவின் என்ட்ரி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு படக்குழுவினர்களை சந்தித்து அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தும் பரிசுகளை வழங்கியும் வரும் கமல்.
இன்று நடிகர் சூர்யாவை சந்தித்து தன் கையில் கட்டி இருந்த rolex watch-ஐ சூர்யாவிக்கு பரிசாக வழங்கினார்..சூர்யாவுடன் இணைந்து நடிப்பதை உறுதி செய்தார் கமல்ஹாசன்

கமலின் பரிசினை ஏற்று கொண்ட சூர்யா இப்படி ஒரு தருணம் வாழ்க்கையை அழகாக்குகிறது! உங்கள் ரோலெக்ஸ்க்கு நன்றி அண்ணா என தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..
உலகநாயகன் கமல் ஹாசன் நடிகர் சூர்யாவிற்கு பரிசளித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. லோகேஷ் கனகராஜிக்கு சொகுசு காரை பரிசளித்தார் கமல்ஹாசன்