Last Updated on May 14, 2021 by Dinesh
நாளை முதல் புதிய கட்டுபாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது…

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அதனை கட்டுபடுத்ததமிழஅரசு கடந்த மே 10 முதல் 24 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியது.
இருப்பினும் கொரோனா தொற்று பரவல் தமிழகத்தில் முப்பதாயிரத்தை கடந்து வருவதால் அதை கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி, ஏற்கனவே அமலில் இருக்கும் ஊரடங்கில் மேலும் சில கட்டுபாடுகளை தற்போது விதித்துள்ளது..
நாளை காலை 4 மணி முதல் வரும் 24ஆம் தேதி காலை 4 மணி வரை ஏற்கனவே உள்ள கட்டுபாடுகளுடன் புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொரோனா நோய் பரவலை கட்டுபடுத்துவதற்காக இன்று நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அரசு உயர் அதிகாரிகள், மருத்துவ வல்லுனர்கள்
ஆகியோருடன் கலந்தாலோசித்தும், நோய் பரவலை தடுக்க மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஆகியவை பரிந்துரைத்துள்ள
ஒரு சில செயல்பாடுகளுக்கான கட்டுபாடுகளை கருத்தில் கொண்டு தற்போது அமலில் இருக்கும் முழு ஊரடங்கு, தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரபடுத்தும் விதமாக நாளை முதல் ஏற்கனவே அமலில் உள்ள கட்டுபாடுகளுடன் கூடிய பின்வரும் புதிய ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
நாளை முதல் புதிய கட்டுபாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்
நடைபாதை கடைகளில் விற்பனை செய்யும் பூ, பழம், காய்கறி ஆகியவளுக்கு ஏற்கனவே நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமத்திக்கப்பட்டது.
தற்போது விதிக்கபட்ட புதிய கட்டுபாட்டில் பூ, பழம், காய்கறி விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் இயங்க அனுமதி இல்லை.
இவைகள் அனைத்தும் ஒரே சமயத்தில் 50 சதவீதம் வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும்
தேநீர் கடைகளுக்கு 12 மணி வரை இயங்க அனுமத்திக்கபட்ட நிலையில் தற்போது அதற்க்கு இயங்க அனுமதி இல்லை.
மின் வணிக நிறுவனங்கள் (e-commerce)மூலம் காய்கறி, மளிகை பலசரக்குகள் ஆகியவை விநியோகம் செய்ய மதியம் 2.00மணி முதல் மாலை 6.00 மணி வரை இயங்க அனுமதி
திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிக்கு மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஈ- பாஸ் கட்டாயம் எடுக்க வேண்டும்.
அதற்கான ஈ- பாஸ் சேவை முறை (17.05.2021) ஆகிய தேதியில் நடைமுறைக்கு வருகிறது..
ஏற்கனவே அறிவித்தபடி தமிழகம் முழுவதும் இரவு 10.00 மணி முதல் காளை 4.00 மணி முதல் இருக்கும் இரவு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.
ஞாயிற்று கிழமைகளில் இருந்த முழு ஊரடங்கு தொடர்ந்து (16.05.2021 முதல் 23.05.2021) வரை அமலில் இருக்கும்.
வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டிலிருந்து தமிழகதிற்க்கு வருபவர்களுக்கு ஈ – பாஸ் முறை கட்டாயமாக்கபடுகிறது.
ஊரடங்கு விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடித்தால் மட்டுமே கொரோனா தொற்று பரவலை கட்டுபடுத்த முடியும் என்பதால் மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
ஏற்கனவே பிறபித்த ஊரடங்கில் தனியாக இயங்கும் மளிகை, பலசரக்கு, காய்கறி கடைகள், தேர்நீர் கடைகள், உணவகங்கள் ஆகியவற்றிற்கு பகல் 12 மணி வரை இயங்க அனுமதி அளிக்கபட்டிருந்தது.