Last Updated on September 23, 2021 by Dinesh
mi vs kkr 2021: இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த இரண்டு அணிகள் மோதும் போட்டி இன்று இரவு இந்திய நேரப்படி 7.30 மணிக்கு ஷேய்க் ஜயேத் மைதானத்தில் நடைபெற உள்ளது.
நடப்பு சாம்பியனாக வலம் வரும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இன்று மோதுவதால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெரும் என்பதில் ஐபிஎல் ரசிகர்களை ஆர்வத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஐபிஎல் சீசன் 14 இல் தற்போது இந்த இரு அணிகள் விளையாடும் போட்டியின் எண்ணிக்கையானது 34 வது போட்டியாகும்.
இன்று விளையாட போகும் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் இதுவரை தலா 8 ஆட்டங்களை விளையாடி உள்ளன..
அதில் மும்பை இந்தியன்ஸ் அணி இது வரை விளையாடிய 8 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று மீதமுள்ள 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
இதை தொடர்ந்து புள்ளி பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 புள்ளிகளுடன் 4 வது இடத்தை தக்க வைத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் உடன் இன்று மோதும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 3 இல் வெற்றி பெற்று 5 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. மேலும் இவை புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளை பெற்று ஆறாம் இடத்தில் உள்ளது.
mi vs kkr 2021
ஐபிஎல் சீசன் 14-இல் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இரண்டாவது முறையாக மோதுகின்றன.
இதற்க்கு முன் இவ்விரு அணிகளும் ஐபிஎல் சீசன் 14-இல் நடந்த 5 வது போட்டியில் இரு அணிகளும் மோதின.
அப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களுக்கு 152 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 56 ரன்களை எடுத்தார்.
மேலும் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 32 பந்துகளில் 43 ரன்களை மட்டுமே எடுத்து இருந்தார்.
இதனை தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 142 ரன்களை மட்டுமே அடித்து தோல்வி அடைந்தது.
கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ராணா 47 பந்துகளில் 57 ரன்களை எடுத்தார்.
மேலும், அணியில் மற்றுமொரு வீரரான ஷூப்மன் கில் 24 பந்துகளில் 34 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்..
இதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை தோற்கடித்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறப்பாக பந்து வீசி 27 ரன்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்களை கைபற்றிய ராகுல் சச்சார்க்கு ஆட்ட நாயகனாவும் தேர்வு செய்யபட்டார்.
இதை தொடர்ந்து தற்போது இந்த இரு அணிகளும் இரண்டாவது முறையாக மோதும் போட்டி என்பதினால் இந்த போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்ற கேள்வி ரசிகர்கள் இடையே நிலவி வருகிறது.